லோக்கல் சரக்கு சினிமா விமர்சனம் : சந்தர்ப்ப சூழ்நிலை வாதிகள் உலா வரும் சமுதாயத்தில் பெண்கள் தைரியமாகவும் தன்னம்பிக்கையுடன் வாழ முடியும் என்கிற கருத்தை ஆழமாக பதிவு செய்கிறது லோக்கல் சரக்கு| ரேட்டிங்: 2.5/5
வராஹ சுவாமி பிலிம்ஸ் சார்பில் கே.வினோத்குமார் பிரமாண்ட தயாரிப்பில், எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில், பிரபல நடன இயக்குனர் தினேஷ் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘லோக்கல் சரக்கு’.
இதில் யோகி பாபு, உபாசனா, இமான் அண்ணாச்சி, சாம்ஸ், ரெமோ சிவா, சிங்கம் புலி, வையாபுரி, சென்றாயன், வினோதினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
இசை வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ், ஒளிப்பதிவு கே.எஸ்.பழநி, படத்தொகுப்பு ஜே.எப்.கேஸ்ட்ரோ, பாடல்கள் விவேக, கலை முஜ்பூர் ரகுமான், இயக்கம் எஸ்.பி.ராஜ்குமார். மக்கள் தொடர்பு ‘கிளாமர்’ சத்யா.
நாயகியாக நடித்திருக்கும் உபாசனா தன்னுடைய கதாபாத்திற்கு சிறப்பு செய்துள்ளார். படத்தின் ஹைலைட்டான க்ளைமேக்ஸ் காட்சியில் உபசனா நேர்த்தியான நடிப்பு வழங்கியுள்ளார்.
யோகி பாபு, சென்றாயன், இமான் அண்ணாச்சி ஆகியோர் தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடிப்பு மீட்டரை சிறப்பாக கையாண்டு உள்ளனர்.
சரக்கு போதையில் படம் சூழலும் போது சாம்ஸ் காமெடியில் அசத்தி நம்மை காமெடி போதையில் வைத்து இருக்கிறார்.
மேலும் ரெமோ சிவா, சிங்கம் புலி, வையாபுரி, வினோதினி உள்ளிட்ட துணை கதாபாத்திரங்கள் யதார்த்தமான நடிப்பை தந்து திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளனர்.
இசை வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ், ஒளிப்பதிவு கே.எஸ்.பழநி, படத்தொகுப்பு ஜே.எப்.கேஸ்ட்ரோ, பாடல்கள் விவேகா, கலை முஜ்பூர் ரகுமான், ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது.
படத்தொகுப்பாளர் ஜே.எப்.கேஸ்ட்ரோ குடிபோதையில் சுழலும் காட்சிகளை கொஞ்சம் குறைத்து இருந்தால் படம் இன்னும் கொஞ்சம் வேகமாக நகர்ந்திருக்கும்.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் பொறுப்பில்லாமல் குடிபோதையில் ஊர் சுற்றி, எப்போதும் குடிக்கு அடிமையாகும் போது, அந்த குடும்பம் எப்படி பல சிக்கலில் மாட்டுகிறது என்பதை கதை களமாக வைத்து, பெண்கள் மன தைரியத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்ற செய்தியை அழுத்தமாக சொல்லி, எதிர்பாராத திருப்பங்களுடன் திரைக்கதை அமைத்து நகைச்சுவையோடு படைத்து இருக்கிறார் இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார்.
மொத்தத்தில் சந்தர்ப்ப சூழ்நிலை வாதிகள் உலா வரும் சமுதாயத்தில் பெண்கள் தைரியமாகவும் தன்னம்பிக்கையுடன் வாழ முடியும் என்கிற கருத்தை ஆழமாக பதிவு செய்கிறது லோக்கல் சரக்கு.