லெவன் சினிமா விமர்சனம் : லெவன் – பார்வையாளர்களுக்கு மிகவும் புதிய அனுபவத்தைத் தரும் க்ரைம் த்ரில்லர் | ரேட்டிங்: 3/5

0
346

லெவன் சினிமா விமர்சனம் : லெவன் – பார்வையாளர்களுக்கு மிகவும் புதிய அனுபவத்தைத் தரும் க்ரைம் த்ரில்லர் | ரேட்டிங்: 3/5

நடிகர்கள்:
அரவிந்தனாக நவீன் சந்திரா
சாந்தியாக அபிராமி
போலீஸ் அதிகாரியாக ஷஷாங்க்
மனோகராக திலீபன்
தாராவாக ரித்விகா
சஞ்சனாவாக ரேயா ஹரி
சந்திரசேகராக ஆடுகளம் நரேன்
தீரனாக அர்ஜய்

படக்குழு :
எழுதி இயக்கியவர் – லோகேஷ் அஜ்ல்ஸ்
தயாரிப்பாளர் – அஜ்மல் கான் மற்றும் ரேயா ஹரி
பேனர் – ஏஆர் என்டர்டெயின்மென்ட்
இசையமைப்பாளர் – டி.இமான்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – பிரபு சாலமன்
இணை தயாரிப்பாளர் – கோபாலகிருஷ்ணா.எம்
ஒளிப்பதிவு இயக்குனர் – கார்த்திக் அசோகன்
எடிட்டர் – ஸ்ரீகாந்த்.என்.பி
கலை இயக்குனர் – பி.எல். சுபேந்தர்
அதிரடி இயக்குனர் – பீனிக்ஸ் பிரபு
ஆடை வடிவமைப்பாளர் – கிருத்திகா சேகர்
பாடல் வரிகள் – கபிலன், விஷ்ணு எடவன், லோகேஷ் அஜ்ல்ஸ்
பாடகர்கள் – மனோ, ஆண்ட்ரியா ஜெரேமியா, ஸ்ருதி ஹாசன் மற்றும் ஜோனிதா காந்தி
ஒலி வடிவமைப்பாளர் – எம்.ஆர்.ராஜகிருஷ்ணன்
தயாரிப்பு நிர்வாகி – ஹக்கீம் சுலைமான்
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

லெவன் ஒரு எரிந்த உடலுடன், ஒரு திருப்பமான த்ரில்லர் கதையுடனும் தொடங்குகிறது. நேர்மையான, துணிச்சலான மற்றும் புத்திசாலித்தனமான ஒரு உதவி ஆணையராக உள்ளார் அரவிந்த் (நவீன் சந்திரா). தனது புலனாய்வு நிபுணத்துவத்தை பயன்படுத்தி காவல்துறை மிகவும் சவாலான குற்ற வழக்குகளில் சிலவற்றைத் தீர்க்க உதவியுள்ளார். இந்நிலையில்,  கொலையாளி எந்த தடயத்தையும் விட்டுச் செல்லாமல் எரிந்த நிலையில் தொடர்ச்சியாக ஒரே மாதியாக கொலைகள் நடத்துகிறான். இந்த வழக்கை கையாளும் ரஞ்சித் (ஷஷாங்க்) ஒரு விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு செல்கிறார். அவருக்கு பதிலாக இந்த புதிய தொடர் கொலை வழக்கு விசாரணைக்கு அரவிந்தன் நியமிக்கப்படுகிறார். அவருக்கு உதவியாக எஸ் ஐ மனோகர் (திலீபன்) அமர்த்தப்படுகிறார். அரவிந்த் வழக்கைப் பெற்ற பிறகும், கொலையாளி எந்த தடயத்தையும் விட்டுச் செல்லாமல் எரிந்த நிலையில் தொடர்ச்சியாக ஒரே மாதியாக கொலைகள் நடத்துகிறான். ஒரு சிறந்த அதிகாரியான அரவிந்த் தனது கடினமான சவாலை எதிர்கொள்கிறார், ஆனால் இந்த தொடர் கொலைகாரன், அவரது நடவடிக்கைகள் தர்க்கத்தை மீறுகின்றன, அவரது தைரியத்தையும் புத்திசாலித்தனத்தையும் அவற்றின் வரம்புகளுக்குள் தள்ளுகின்றன. விசாரணையின் ஒரு பகுதியாக, அரவிந்த் முறையாக துப்புகளை ஒன்றிணைத்து, சந்தேகத்திற்கிடமான ஒரு தம்பதியிடம் விசாரிக்கப்பட்டு, அவர்களது இரட்டை சகோதரர்களில் ஒருவர் இறந்துவிட்டதாக தெரியவருகிறது. உண்மையில் இந்தக் கொலைகளை எல்லாம் யார் செய்கிறார்கள்? சைக்கோ கொலையாளிக்கும் இறந்தவர்களுக்கும் என்ன தொடர்பு? ஏன் இந்த சைக்கோ கொலையாளி இரட்டையர்களில் ஒருவரை மட்டும் கொல்கிறான்? அரவிந்த் சைக்கோ கொலையாளியைப் பிடித்தாரா என்பதை அறிய, நீங்கள் அதை திரையில் பார்க்க வேண்டும்.

அரவிந்தனாக நவீன் சந்திரா இறுக்கமான முகத்துடன், ஒரு தீவிர போலீஸ் அதிகாரியாக உடல்மொழி மூலம் ஒரு நிலையான நடிப்புடன் அந்த கதாபாத்திரத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார்.

இரட்டையர்களில் ஒருவராக நாயகி சஞ்சனாவாக ரியா ஹரி ஓகே.

எஸ் ஐ மனோகராக திலீபன், போலீஸ் அதிகாரியாக ஷஷாங்க் இருவரும் வலுவான வேடங்களில் சிறந்த நடிப்பை வழங்குகிறார்கள் மற்றும் மனதில் தனித்து நிற்கிறார்கள்.

ஒரு சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும், கதையின் ஒரு முக்கிய பகுதியாக இருக்கும் பள்ளி முதல்வர் சாந்தியாக அபிராமி ஒரு நேர்த்தியான நடிப்பு வழங்கியுள்ளார்.

போலீஸ் கமிஷனர் சந்திரசேகராக ஆடுகளம் நரேன், தீரனாக அர்ஜய், ரித்விகா, ரவி வர்மா, கிரிதி உட்பட அனைவரும் சிறப்பாக நடித்து தங்கள் வேடங்களில் அனைவரையும் கவர்ந்து இருக்கிறார்கள்.

தொழில்நுட்ப அம்சங்கள், கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு மற்றும் காட்சியமைப்பு நன்றாக உள்ளன.

இமானின் பின்னணி இசை குற்றத் திரில்லருக்கு ஒரு நல்ல சூழல் சேர்க்கிறது.

எடிட்டர் ஸ்ரீகாந்த்.என்.பி விறுவிறுப்பான படத்தொகுப்பும் படத்துக்கு பலம் சேர்த்துள்ளார்.

அதேபோல் கலை இயக்குனர் – பி.எல். சுபேந்தர், அதிரடி இயக்குனர் – பீனிக்ஸ் பிரபு பங்களிப்பு பாராட்டத்தக்கது.

இரட்டையர்களை வைத்து புதுமையான கதையை கவனமாக கையாண்டு, இடைவேளைக்கு முன் விசாரணை செயல்முறை ஈர்க்கும் வகையில் உள்ளது, மற்றும் இரண்டாம் பாதியிலிருந்து அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்துடன் கதை தொடர்கிறது, ஃப்ளாஷ்பேக்கில் ஒரு த்ரில்லரில் இதுவரை கண்டிராத வித்தியாசமான உணர்ச்சிபூர்வமான கருத்துடன், எதிர்பாராத திருப்பத்துடன் வித்தியாசமான திரைக்கதையுடன், ஒரு கச்சிதமான திரில்லர் படமாக இயக்கி உள்ளார் இயக்குனர் லோகேஷ் அஜ்லஸ்.

மொத்தத்தில் ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரேயா ஹரி இணைந்து தயாரித்துள்ள லெவன் – பார்வையாளர்களுக்கு மிகவும் புதிய அனுபவத்தைத் தரும் க்ரைம் த்ரில்லர்.