ராயன் சினிமா விமர்சனம் : ராயன் குடும்ப உணர்வு கலந்த ஆக்ஷன் எமோஷனல் த்ரில்லர் | ரேட்டிங்: 4/5
நடிகர்கள்:
தனுஷ்
எஸ். ஜே. சூர்யா
பிரகாஷ்ராஜ்
செல்வராகவன்
சந்தீப் கிஷன்
காளிதாஸ் ஜெயராம்
துஷாரா விஜயன்
அபர்ணா பாலமுரளி
வரலட்சுமி சரத்குமார்
சரவணன்
திலீபன்
படக்குழு :
எழுத்தாளர்-இயக்குனர் : தனுஷ்
தயாரிப்பு : சன் பிக்சர்ஸ்
தயாரிப்பாளர் : கலாநிதி மாறன்
இசை : ஏ. ஆர். ரஹ்மான்
ஒளிப்பதிவாளர் : ஓம் பிரகாஷ்
படத்தொகுப்பு : பிரசன்னா
நடன இயக்குனர் : பிரபு தேவா, பாபா பாஸ்கர்
தயாரிப்பு வடிவமைப்பாளர் : ஜாக்கி
பாடலாசிரியர் : கவிஞர் தனுஷ், கானா கதர், அறிவு
ஆடை வடிவமைப்பாளர் : காவ்யா ஸ்ரீராம்
சண்டைப் பயிற்சி : பீட்டர் ஹெய்ன்
ஒப்பனை : பி. ராஜா
படங்கள் : தேனி முருகன்
விளம்பரம் : சிவம் சி. கபிலன்
தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் : ரமேஷ் குச்சிரையார்
நிர்வாக தயாரிப்பாளர் : ஸ்ரேயாஸ் சீனிவாசன்
மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அகமது
ஓட்டி வெட்டிய தலைமுடியுடன் காத்தவராயன் கதாபாத்திரத்தில் தனுஷ் படத்தின் பெரும் பகுதியில் தன் தம்பிகள், தங்கை மீதான பாசத்தை வெளிப்படுத்திய விதம், குடும்பத்திற்காக எதிராளிகளிடம் தன் கோபத்தையும், உணர்ச்சியையும் கட்டுப்படுத்திக் கொண்டு குறைவான வசனங்களுடன் நடிப்புத் திறனை தனது கண்கள் மூலம் அசத்தலாக வெளிப்படுத்தி உள்ளார். மேலும் தனது குடும்பத்திற்கு ஆபத்து ஏற்படும் போது வெறித்தனமான கோபத்தை வெளிப்படுத்தும் காட்சிகளிலும், ஆக்ஷன் காட்சிகளிலும் பட்டையை கிளப்பி உள்ளார்.
சிக்கலான கதாபாத்திரத்தில் தனுஷின் தம்பியாக சந்தீப் கிஷன் தனது கதாபத்திரத்தை திறம்பட கையாண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் படத்தின் இரண்டாம் பகுதியின் விறுவிறுப்புக்கு இவரது கதாபாத்திரம் பெரும் பங்கு வகித்துள்ளது.
அதே போல தனுஷின் மற்றொரு தம்பியாக காளிதாஸ் ஜெயராம் பாகம் குறைவு என்றாலும், நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
தங்கை துர்காவாக துஷாரா விஜயன் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். தன் பெற்றோரை போல பாவித்து தன் மீதும், தன் தம்பிகள் மீதும் அன்பும், பாசத்தையும் வைத்த அண்ணனுக்கு ஆபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடும் போது அவரை காப்பாற்றும் காட்சிகளில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியதுடன், எதிரிகளிடம் இருந்து அண்ணனை காப்பாற்ற சண்டை போடும் காட்சிகளிலும், அண்ணனை கொல்ல முயன்ற தனது மற்றொரு சகோதரனைப் கொல்லும் காட்சிகளிலும் உயிரோட்டமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
பிரகாஷ் ராஜ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இருவரும் ஆர்ப்பாட்டம் இல்லாத அடக்கமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
செல்வராகவன் படத்துக்கு பெரிய பலம் சேர்த்துள்ளார்.
சரவணன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் அந்தந்த பாத்திரங்களில் கண்ணியமாக நடித்துள்ளனர்.
தனுஷ், ஒரு திரைப்பட தயாரிப்பாளராக, ஒரு இயக்குனர், எழுத்தாளர் மற்றும் நடிகராக, தனுஷ் தனது திறமைகளை வெற்றிகரமாக வெளிப்படுத்துகிறார். தனது முதல் இயக்குனரான பா.பாண்டியைப் போலவே, கேமராவுக்கு பின்னாலும் தன்னால் திடமான வேலைகளைச் செய்ய முடியும் என்பதை தனுஷ் மீண்டும் காட்டுகிறார். எளிமையான கதையாக ஆரம்பித்து கேங்ஸ்டர் மற்றும் குடும்ப செண்டிமெண்ட்டை மையமாகக் கொண்ட கதைகளம் அமைத்துள்ளார் இயக்குனர். ஒரு சகோதரர், ஒரு தாழ்மையான வாழ்க்கையை நடத்துவது, கடினமாக உழைப்பது மற்றும் தனது குடும்பத்தை தீங்கு விளைவிப்பவர் களிடமிருந்து பாதுகாக்க போராடுவது ஆகியவற்றின் மையக் கதையில் எதிரிகளுக்கும் இடையிலான பதற்றத்தை அதிகரித்து, துரோகத்தின் பின்னணியில் ஒரு வலுவான திரைக்கதை அமைத்து பல கணிக்க முடியாத திருப்பங்களுடன் மிகவும் ஈர்க்கக்கூடிய இரண்டாம் பாதியுடன் விறுவிறுப்பாக ரத்தம் தெறிக்க விட்டு நேர்த்தியாக இயக்கியுள்ளார் தனுஷ்.
மொத்தத்தில் சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ள ராயன் குடும்ப உணர்வு கலந்த ஆக்ஷன் எமோஷனல் த்ரில்லர்.