பிடி சார் விமர்சனம் : பிடி சார் பாதிக்கப்பட்ட பெண்கள் துணிந்து நின்று போராட வேண்டும் என்று உத்வேகம் தரும் போராளி | ரேட்டிங்: 3/5
வேல்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் சார்பில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தயாரித்திருக்கும் பிடி சார் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கார்த்திக் வேணுகோபாலன்.
இதில் ஹிப்ஹாப் தமிழா ஆதி – கனகவேல், காஷ்மீரா பர்தேஷி – வானதி, தியாகராஜன் – குரு புருஷோத்தமன், கே.பாக்யராஜ் – தர்மதுரை, இளையதிலகம் பிரபு – மாணிக்கவேல், ஆர்.பாண்டியராஜன் – கே.செல்வராஜ், இளவரசு – ரத்தினம், முனிஷ்காந்த் -மாரிமுத்து, பட்டிமன்றம் ராஜா – ராஜன், அனிக்கா சுரேந்திரன் – நந்தினி, தேவதர்ஷினி – மகேஸ்வரி, வினோதினி வைத்தியநாதன்- காவேரி, ஓய்.ஜி மதுவந்தி – ஆதிரை அருணாச்சலம், ஆர்ஜே விக்கி – விக்னேஷ்காந்த், சுட்டி அரவிந்த் – காட்சன்நியானராஜ், பிரசன்னா பாலச்சந்தர்- ரகுநாதன், அபிநக்ஷத்ரா – மித்ரா, ப்ரனிக்கா – சாருப்ரீத்தா, திரிஷ்வ்சாய் – ராகுல் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை -ஹிப்ஹாப் தமிழா, ஒளிப்பதிவாளர் – மாதேஷ் மாணிக்கம், கலை – ஏ.அமரன், படத்தொகுப்பு – பிரசன்னா ஜி.கே., சண்டை பயிற்சி – மகேஷ் மேத்திவ், நடன இயக்குனர் – சந்தோஷ், ஆடை வடிவமைப்பு – ஸ்வப்னா ரெட்டி, ஒலிக்கலவை – தபஸ் நாயக், ஒலி வடிவமைப்பு – ஸ்ரீகாந்த் சுந்தர், சுகுமார், விஎஃக்ஸ்- ப்ரவீன்.டி, லைன் புரொடியுசர் – என்.விக்கி, புரொடக்ஷன் எக்சிகியூடிவ் – எம்.கே. அருணாச்சலம், ஸ்டில்ஸ் – அமீர், கலரிஸ்ட் – கே.அருண் சங்கமேஸ்வரர், கோர்டினேடிங் புரொடியுசர் – பிரதிப் ராயன், கிரியேட்டிவ் புரொடியுசர் – கே.ஆர். பிரபு, எக்சிகியூட்டிவ் புரொடியுசர் – அஷ்வின்குமார், மக்கள் தொடர்பு – யுவராஜ்.
ஹிப்ஹாப் தமிழா ஆதி பிடி ஆசிரியர் கனகவேலாக தனது வழக்கமான நடிப்பை கொடுத்திருக்கிறார். அழுத்தமான காட்சிகளில் உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
அனிக்கா சுரேந்திரன் – நந்தினி கதாபாத்திரம் மையமாக வைத்து படம் விறுவிறுப்பாக நகர உதவுகிறது. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் தன் சொந்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் சமூகத்தால் எப்படி மோசமாக பேசி வெறுப்புடன் அவளைப் பார்க்கும்போதும், மேலும் அவளுடைய தம்பி அவள் கைகளை விடும்போது அந்த காட்சிகளில் அனிக்கா சுரேந்திரன் அற்புதமான நடிப்பு தந்துள்ளார்.
இளவரசு – ரத்தினம், தேவதர்ஷினி – மகேஸ்வரி, வினோதினி வைத்தியநாதன்- காவேரி இவர்கள் மூவரும் யதார்த்தமான நடிப்பால் தங்களது கதாபாத்திரத்திற்கு உயிரூட்டி பார்வையாளர்கள் மனதில் ஆழமாக இடம் பிடித்துள்ளனர்.
தியாகராஜன் – குரு புருஷோத்தமனாக பவர்ஃபுல்லான வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார்.
காஷ்மீரா பர்தேஷி – வானதி, கே.பாக்யராஜ் – தர்மதுரை, இளையதிலகம் பிரபு – மாணிக்கவேல், ஆர்.பாண்டியராஜன் – கே.செல்வராஜ், முனிஷ்காந்த் – மாரிமுத்து, பட்டிமன்றம் ராஜா – ராஜன், ஓய்.ஜி மதுவந்தி – ஆதிரை அருணாச்சலம், ஆர்ஜே விக்கி – விக்னேஷ்காந்த், சுட்டி அரவிந்த் – காட்சன்நியானராஜ், பிரசன்னா பாலச்சந்தர்- ரகுநாதன், அபிநக்ஷத்ரா – மித்ரா, ப்ரனிக்கா – சாருப்ரீத்தா, திரிஷ்வ்சாய் – ராகுல் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி திரைக்கதைக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை -ஹிப்ஹாப் தமிழா, ஒளிப்பதிவாளர் – மாதேஷ் மாணிக்கம், கலை – ஏ.அமரன், படத்தொகுப்பு – பிரசன்னா ஜி.கே., சண்டை பயிற்சி – மகேஷ் மேத்திவ், நடன இயக்குனர் – சந்தோஷ், ஆடை வடிவமைப்பு – ஸ்வப்னா ரெட்டி, ஒலிக்கலவை – தபஸ் நாயக், ஒலி வடிவமைப்பு – ஸ்ரீகாந்த் சுந்தர், சுகுமார், விஎஃக்ஸ்- ப்ரவீன்.டி, ஸ்டில்ஸ் – அமீர், கலரிஸ்ட் – கே.அருண் சங்கமேஸ்வரர், விறுவிறுப்பான திரைக்கதையில் உள்ள பதற்றத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவியுள்ளது அவர்கள் உழைப்பு.
பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் கவுரவம் கருதி அப்படியே இருந்து விடாமல், பாலியல் சீண்டலுக்கு, மிரட்டலுக்கும் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற முக்கியமான சமூக செய்தியை பற்றி பேசும் போது இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் திரைக்கதையில் உள்ள நாடகத் தன்மையை சற்று குறைத்திருக்கலாம்.
மொத்தத்தில் வேல்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் சார்பில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தயாரித்திருக்கும் பிடி சார் பாதிக்கப்பட்ட பெண்கள் துணிந்து நின்று போராட வேண்டும் என்று உத்வேகம் தரும் போராளி.