Site icon Chennai City News

நீல நிற சூரியன் விமர்சனம் : நீல நிற சூரியன் ஆண் பெண்ணாக மாற எடுக்கும் முயற்சியில் சந்திக்கும் வலிகளை வித்தியாசமான கோணத்தில் பதிவு செய்வதில் பிரகாசிக்கிறது | ரேட்டிங்: 3/5

நீல நிற சூரியன் விமர்சனம் : நீல நிற சூரியன் ஆண் பெண்ணாக மாற எடுக்கும் முயற்சியில் சந்திக்கும் வலிகளை வித்தியாசமான கோணத்தில் பதிவு செய்வதில் பிரகாசிக்கிறது | ரேட்டிங்: 3/5

மாலா மன்யன் தயாரித்திருக்கும் நீல நிற சூரியன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சம்யுக்தா விஜயன்.

நடிகர் அரவிந்த் பானு – சம்யுக்தா விஜயன், மனநல மருத்துவர் – கிட்டி, அரவிந்தின் தந்தை – கஜராஜ், அரவிந்தின் தாய் – கீதா கைலாசம் , ராஜேந்திரன் – பிரசன்னா பாலச்சந்திரன், துணை முதல்வர் – கே வி என் மணிமேகலை, கார்த்திக் – மாசாந்த் நடராஜன் , ஹரிதா, கார்த்திக் தந்தை- வின்னர் ராமசந்திரன், மோனா பெத்ரா,  பானுவின் உறவினர் சகோதரி – செம்மலர் அன்னம்,  முதல்வர் – கௌசல்யா சரவணராஜா,  கரஸ்பாண்டன்ட் – விஸ்வநாத் சுரேந்திரன், ரஞ்சித் – அஜய் ஈபன் கோபால் , ஜெனிஃபர் – வைதீஸ்வரி,அருண் – அனிருத், ஆரூனின் நண்பர் – ரேவன், தமிழ் ஆசிரியர் – சத்யா மருதானி, ராஜேந்திரனின் மனைவி – சாவித்திரி, அரவிந்தின் உறவினர் – சாரதா, கெஜட் அதிகாரி – ரஞ்சித் குமார் ஜி, கணித ஆசிரியர்- தேவ் ஹபிபுல்லா, வேதியியல் ஆசிரியர்- சாய் பாலா, பொருளாதாரம் ஆசிரியர்- சரவணன், கார்த்திக்கின் தாய்-ஆன்னி ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்;கள்:- ஒளிப்பதிவு-எடிட்டிங்-இசை-ஸ்டீவ் பெஞ்சமீன், கலை-மீட்டூ, இணை இயக்குனர்- கௌசிக், துணை இயக்குனர்- பாஸ்கரன், பிஆர்ஒ-கேஎஸ்கே செல்வா

பொள்ளாச்சியில் தனியார் பள்ளியில் உயர்கல்வி இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வரும் அரவிந்த்(சம்யுக்தா விஜயன்) கஜராஜ் மற்றும் கீதா கைலாசத்தின் மகன். சிறு வயது முதலே பெண்ணின் இயல்புகளோடு இருப்பதால் பெற்றோர்களுக்கும் சுற்றத்தார்களுக்கும் தெரியாத வண்ணம் பார்த்துக் கொண்டாலும் நாளடைவில் பெண்ணாக மாறும் ஹார்மோன் மாற்று சிகிச்சைகளை ஆரம்பிக்கிறார். இந்நிலையில் அரவிந்திற்கு வசதியான பெண்ணை திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்கின்றனர். முதலில் அதிர்ச்சியாகும் அரவிந்த், திருமணம் வேண்டாம் என்று மறுக்க பெற்றோர்கள் அதற்கு காரணம் என்று கேட்க பதில் சொல்லாமல் செல்கிறார். பின்னர் தன் சக உடற்கல்வி ஆசிரியர் ஹரிதாவின் ஆலோசனைப்படி மனநல மருத்துவரின் அறிவுரையின்படி தன்னை பானுவாக மாற முயற்சிகள் மேற்கொள்கிறார். முதலில் வீட்டில் தான் திருநங்கை என்பதை தெரிவிக்க பூகம்பம் வெடிக்கிறது. ஆனால் அரவிந்த் பிடிவாதமாக நடை, உடை, பாவனை, குரல் என்று பெண்ணாக மாற முடிவு செய்து தான் வேலை செய்யும் பள்ளி முதல்வர், துணை முதல்வர் ஆகியோரிடம் தெரிவிக்க இதற்கு எதிர்ப்பு கிளம்பினாலும் பள்ளி தளாளர் இதற்கு முழு ஆதரவு தெரிவிக்கிறார். அதனால் பள்ளிக்கு அரவிந்த் பானுவாக மாறி செல்கிறார். அதன் பின் அவர் சந்திக்கும் சிக்கல்கள் என்ன? அனைவரும் அவரை பெண்ணாக ஏற்றுக்கொண்டனரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

சம்யுக்தா விஜயனின் அரவிந்த்-பானு என்ற இரு வேறுபட்ட பரிணாமங்களில் தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் மனதில் பதிந்து விடுகிறார். அவரின் மாற்றத்தை எதிர்க்கும் குடும்பம், பணி இடங்களில் சந்திக்கும் இடர்பாடுகள் அதனை பொறுமையோடு கையாண்டு பக்குவமாக எடுக்கும் முடிவுகள் என்று படத்தின் வெற்றிக்கு இவரின் அற்புதமான பங்களிப்பு உலகத்தரம்.

இவருடன் கஜராஜ்,கீதா கைலாசம் , பிரசன்னா பாலச்சந்திரன், கே வி என் மணிமேகலை,- மாசாந்த் நடராஜன் , ஹரிதா, வின்னர் ராமசந்திரன், மோனா பெத்ரா, செம்மலர் அன்னம்,  கௌசல்யா சரவணராஜா,  விஸ்வநாத் சுரேந்திரன், அஜய் ஈபன் கோபால், வைதீஸ்வரி, அனிருத், ரேவன்,சத்யா மருதானி, சாவித்திரி, சாரதா, ரஞ்சித் குமார் ஜி,தேவ் ஹபிபுல்லா, சாய் பாலா, சரவணன், ஆன்னி ஆகியோரின் நடிப்பு கவனிக்க வைத்துள்ளது.

ஒளிப்பதிவு-எடிட்டிங்-இசை ஸ்டீவ் பெஞ்சமீன் முப்பணிகளையும் திறம்பட அழகாக கொடுத்து படத்திற்கு மெருகு சேர்த்து ரசிக்க வைத்துள்ளார்.

பார்வையாளர்களை கவர்வதற்கு அடிக்கடி பயன்படுத்தப்படும் வணிக பொறிகளை நீல நிற சூரியன் தவிர்க்கிறார். அதற்குப் பதிலாக, அது நம்மை மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை அனுபவங்களுக்குள் ஈர்க்கிறது, இது நம்மை ஆர்வமாகவும் நகர்த்தவும் செய்கிறது.

அரவிந்தாக ரீல்லாக வாழ்ந்தது போதும் பானுவாக ரியலாக வாழ நினைக்கும் ஒருவரின் அனுபவத்தை திரைக்கதையாக அமைத்து அதில் உண்மையான நடைமுறைகளையும், நெருக்கடிகளையும் உணர்வுபூர்வமாக பிரதிபலித்து வாழ்வின் நம்பிக்கைகளையும், பல கையறு நிலைகளையும் கண்ணாடி போலப் பிரதிபலிக்கிறது இயக்குனர் சம்யுக்தா விஜயனின் இந்த நீல நிறச் சூரியன். மேம்பட்ட திரைமொழியுடன் சொல்ல வந்த கருத்தை நெருடல் இல்லாமல் தோய்வு ஏற்படாத வண்ணம் அசத்தலாக புதிய மாற்றத்துடன் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சம்யுக்தா விஜயன்.

மொத்தத்தில் மாலா மன்யன் தயாரித்திருக்கும் நீல நிற சூரியன் ஆண் பெண்ணாக மாற எடுக்கும் முயற்சியில் சந்திக்கும் வலிகளை வித்தியாசமான கோணத்தில் பதிவு செய்வதில் பிரகாசிக்கிறது. 

Exit mobile version