Chennai City News

தீபாவளி போனஸ் சினிமா விமர்சனம் : தீபாவளி போனஸ் மனதைத் தொடும் ஃபீல் குட் மூவி | ரேட்டிங்: 3/5

தீபாவளி போனஸ் சினிமா விமர்சனம் : தீபாவளி போனஸ் மனதைத் தொடும் ஃபீல் குட் மூவி | ரேட்டிங்: 3/5

ஸ்ரீ அங்காளி பரமேஸ்வரி புரொடக்ஷன்ஸ் சார்பில் தீபக் குமார் டாலா தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஜெயபால்.ஜெ இயக்கத்தில், விக்ராந்த் ரித்விகா, மாஸ்டர் ஹரிஷ் நடித்திருக்கும் படம் ‘தீபாவளி போனஸ்’.

ஆக்ஷன் ரியாக்ஷன் நிறுவனம் சார்பில் ஜெனிஷ் வெளியிடுகிறார்.

இசை – மரியா ஜெரால்ட், ஒளிப்பதிவு – களதம் சேதுராம், படத்தொகுப்பு – பார்த்திவ் முருகன், நடனம் – நிசார் கான். மக்கள் தொடர்பு : தர்மா, சுரேஷ்

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ரவி (விக்ராந்த்) கொரியர் டெலிவரி செய்யும் வேலை செய்கிறார். அவரின் மனைவி கீதா (ரித்விகா) அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ஒன்றில் வீட்டு வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சச்சின் (ஹரிஷ்) என்ற மகன் இருக்கிறார், அவர்கள் மிகவும் ஏழ்மையாக இருக்கிறார்கள். பள்ளி செல்லும் மகனின் மகிழ்ச்சிதான் தம்பதியை வாழ வைக்கிறது. தீபாவளி செலவுக்கு, ரவி போனஸை நம்பி இருக்கிறார். ஆனால் ரவிக்கு போனஸ் வராமல் தாமதமாகிறது. தீபாவளி பண்டிகையை கொண்டாட அனைவரும் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், மகன் விரும்பிய போலீஸ் உடை, மனைவி விரும்பிய சேலை, மற்றும் பட்டாசு, வாங்கி கொடுக்க முடியாமல் போகிறது. ரவி தன் குடும்பத்தினர் ஆசையை பூர்த்தி செய்ய போனஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். கணவருக்காக புது ஹெல்மெட் வாங்க கீதா தான் வேலை செய்யும் இடத்தில் கெஞ்சி ரூபாய் 1500 கடன் வாங்கி செல்லும் போது ஹெல்மெட் வாங்க முடியாமல் போக, அந்த பணத்தில் பையனுக்கு துணி வாங்குகிறார். ரவி எதிர்பார்த்தது நடக்காமல் போக, குடும்பத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்காக அவர் பணத்திற்காக பஜாரில் தன் நண்பன் சொன்ன துணி விற்கும் வேலையை செய்கிறார். அப்போது, யாரோ நான்கு பேர் வந்து ரவியை அடிக்கிறார்கள். எதற்காக அவர்கள் தன்னை அடிக்கிறார்கள் என்று புரியாத நிலையில் போலீஸ் ரவியை பிடித்துச்செல்கிறார்கள். போலீஸ் ரவியை எதற்காக போலீஸ் பிடித்தார்கள்? ரவிக்கு போனஸ் கிடைத்ததா? இல்லையா? இவர்கள் தீபாவளியை கொண்டாடினார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

ரித்விகா வீட்டு வேலை செய்யும் பெண்ணாகவும், விக்ராந்த் கொரியர் டெலிவரி செய்யும் கதாபாத்திரத்தில் தீபாவளி திருவிழா நெருங்கும் வேளையில், குடும்பம் நிதி நெருக்கடியால் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் தங்களுடைய குழந்தையின் ஆசையை நிறைவேற்ற போராடும்… ஒரு சாமானிய குடும்பத்தை சேர்ந்த அப்பா – அம்மாவின் வலிகளை இருவரும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி திரைக்கதைக்கு பலம் சேர்ந்து ஜொலிக்கிறார்கள்.

மகன் சச்சினாக ஹரிஷ், உட்பட அனைத்து துணை கதாபாத்திரங்களின் நேர்த்தியான நடிப்பு கதை முன்னேர உதவி உள்ளது.

இசை – மரியா ஜெரால்ட், ஒளிப்பதிவு – கௌதம் சேதுராம், படத்தொகுப்பு – பார்த்திவ் முருகன், நடனம் – நிசார் கான் உட்பட அனைத்து தொழில்நுட்ப வல்லுநர்களின் ஒன்று சேர்ந்த உழைப்பு ஒரு சாமானிய குடும்பத்தை சேர்ந்த அப்பா – அம்மாவின் மகிழ்ச்சி, சோகம், வலிகள் ஆகிய உணர்வுகளை நம்மால் எளிதில் உணரும் வகையில் அமைந்துள்ளது.

திருவிழா சமயத்தில், நிதி நெருக்கடியால் பல குடும்பங்கள் சந்திக்க கூடிய பிரச்னையை கண் முன் நிறுத்தி, அன்றாட வாழ்க்கைக்காக போராடும் நடுத்தர குடும்பங்களின் எதார்த்தமான வாழ்வியலாகவும், எளிமையான கதைக்களம் மூலம் பார்வையாளர்கள் தங்கள் கஷ்டங்களை எளிதில் தொடர்பு படுத்திக் கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தி உள்ளார் இயக்குநர் ஜெயபால்.ஜெ.

மொத்தத்தில் ஸ்ரீ அங்காளி பரமேஸ்வரி புரொடக்ஷன்ஸ் சார்பில் தீபக் குமார் டாலா தயாரித்திருக்கும் தீபாவளி போனஸ் மனதைத் தொடும் ஃபீல் குட் மூவி.

Exit mobile version