தி அக்காலி சினிமா விமர்சனம் : தி அக்காலி – ஏமாற்றம் | ரேட்டிங்: 1.5/5
நடிகர்கள் :
நாசர் – டொனால்ட் மற்றும் செபாஸ்டியன் ஹாலோவே
ஜெய் குமார் – ஹம்சா ரஹ்மான்
தலைவாசல் விஜய் – விஜய்
ஸ்வயம் சித்தா – எஸ் சௌம்யா
வினோத் கிஷன் – வின்சென்ட்
வினோதினி – தாக்ஷ்யாணி
அர்ஜை – செல்வம்
சேகர் – டேவிட்
யாமினி – யாஸ்மின்
தரணி – அனிதா
பரத் – கௌதம்
இளவரசன் – ஈசா
விக்னேஷ் ரவிச்சந்திரன் -விக்கி
சபீர் அலி – சபீர் அலி
மசிஹா சபீர் – ஜானிஸ்
தொழில்நுட்ப கலைஞர்கள் :
இயக்குனர் – முகமது ஆசிப் ஹமீத்
தயாரிப்பாளர் – பி.யூகேஸ்வரன்
ஒளிப்பதிவு- கிரி மர்பி
இசை – அனிஷ் மோகன்
கலை இயக்குனர் – தோட்டா தரணி
ஆடை வடிவமைப்பாளர் – பூர்ணிமா
எடிட்டர் – இனியவன் பாண்டியன்
சண்டைக்காட்சி – தினேஷ் காசி
இனியவன் (Fix it in Post) – Vfx
டப்பிங் இன்ஜினியர் – ராம் கதிர்வேலு
டப்பிங் ஸ்டுடியோ – நாம் ஸ்டுடியோஸ்
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்
புதிதாக நியமிக்கப்பட்ட ஐ.ஓ. எஸ் சௌம்யா (ஸ்வயம் சித்தா) நகரில் நடந்த தொடர்ச்சியான சாத்தானிய கொலைகளுக்கு அமானுஷ்ய கும்பல்களும் சக்திகளும் காரணமாக இருந்த 7 வருட வழக்கைப் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த வழக்கை கையாண்ட ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி ஹம்சா ரஹ்மானிடம் (ஜெய் குமார்) விசாரணை மேற்கொள்கிறார். அமானுஷ்ய அறிவியல் மற்றும் சாத்தானிய வழிபாட்டில் உள்ள ஜானிஸ் (மசிஹா சபீர்) என்ற இளம் பெண்ணால் இந்த கொலைகள் செய்யப்பட்டுள்ளன என்று விசாரணை அதிகாரியிடம் ஹம்சா அந்த வழக்கை கையாண்ட போது எப்படி இந்த வழக்கில் தடுமாறினார் மற்றும் அவரது விசாரணைகளின் போது அவர் என்ன என்ன மர்மங்களை கண்டுபிடித்தார் என்பதை குழப்பமான கலவையுடன் விவரிக்கத் தொடங்கிய போது கதை தெளிவில்லாமல் விரிவடைகிறது.
இரட்டை வேடத்தில் நாசர் – டொனால்ட் மற்றும் செபாஸ்டியன் ஹாலோவே (வில்லன்), ஜெய் குமார் – ஹம்சா ரஹ்மான், தலைவாசல் விஜய் – விஜய், ஸ்வயம் சித்தா – எஸ் சௌம்யா, வினோத் கிஷன் – வின்சென்ட், வினோதினி – தாக்ஷாயணி, அர்ஜை – செல்வம், சேகர் – டேவிட், யாமினி – யாஸ்மின், தரணி – அனிதா, பரத் – கௌதம், இளவரசன் – ஈசா, விக்னேஷ் ரவிச்சந்திரன் – விக்கி, சபீர் அலி – சபீர் அலி, மசிஹா சபீர் – ஜானிஸ் ஆகியோருக்கு இயக்குனர் முகமது ஆசிப் ஹமீத் கதையை எப்படி விவரித்தார் என்று தெரியவில்லை. நடிகர்கள் அனைவரும் இயக்குனர் என்ன சொன்னாரோ அதை அப்படியே தெளிவில்லாத குழப்பமான திரைக்கதைக்கு தங்களது கதாபாத்திரம் மூலம் வெளிப்படுத்தி உள்ளனர்.
ஒளிப்பதிவு – கிரி மர்பி, கலை இயக்குனர் – தோட்டா தரணி, இனியவன் (Fix it in Post) – Vfx), இசை – அனிஷ் மோகன் ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு குழப்பமான கதைக்கு முடிந்த அளவுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.
தி அக்காலி கதைக்களம் சூனியம், திகில், அமானுஷ்யம் மற்றும் திரில்லர் வகை சார்ந்ததா? அதில் பார்வையாளர்கள் எந்த வகையை பின்பற்ற வேண்டும் என்பதை இயக்குனர் முகமது ஆசிப் ஹமீத் படம் பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு தெரியபடுத்த வேண்டும். இயக்குனர் கதை சொல்லும், காட்சிப்படுத்தலும் மற்றும் எடிட்டிங்கில் கோட்டை விட்டுள்ளார்.
மொத்தத்தில் பி.யூகேஸ்வரன் தயாரித்திருக்கும் தி அக்காலி – ஏமாற்றம்.