டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம் : டென் ஹவர்ஸ் ஒரு தீவிரமான க்ரைம் த்ரில்லர் | ரேட்டிங்: 3/5
நடிகர்கள்
காஸ்ட்ரோவாக சிபி சத்யராஜ்
எஸ்ஐ மணியாக கஜராஜ்
ஜீவா ரவி டாக்டராக
ஜீவாவாக ராஜ் அய்யப்பா
மாரியாக முருகதாஸ்
மெய்யப்பனாக திலீபன்
உதயா
தங்கதுரை
சரவண சுப்பையா
ஷருமிஷா
நிரஞ்சனா
படக்குழு
எழுத்தாளர் மற்றும் இயக்குனர் – இளையராஜா கலியபெருமாள்
ஒளிப்பதிவாளர் – ஜெய் கார்த்திக்
இசையமைப்பாளர் – கே.எஸ்.சுந்தரமூர்த்தி
எடிட்டர் – லாரன்ஸ் கிஷோர்
கலை இயக்குனர் – அருண் சங்கர் துரை
ஸ்டண்ட் – சக்தி சரவணன்
ஒலி வடிவமைப்பு – சச்சின் (ஒத்திசைவு சினிமாஸ்)
ஒலிக்கலவை – அரவிந்த் மேனன்
உற்பத்திக் கட்டுப்பாட்டாளர் – பாரதி ராஜா
ஸ்டில்ஸ் – ராஜ்
பப்ளிசிட்டி டிசைனர் – தினேஷ் அசோக்
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்
சாதாரண போலீஸ்காரராக காஸ்ட்ரோ (சிபிராஜ்) சரியான தடையமே இல்லாததால் யாரும் கண்டுபிடிக்க முடியாத குற்றங்களை, நம்பமுடியாத வேகத்தில் தடயங்களை சேகரித்து குற்றவாளிகளை வேட்டையாடுவதில் வல்லவர் என்பதை எஸ்ஐ மணி (கஜராஜ்) விரிவாக விளக்குவது மூலம் படம் தொடங்குகிறது. தற்போது சேலம் மாவட்டம் ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார் காஸ்ட்ரோ. அவரது காவல் நிலையத்தில் ஒரு கல்லூரி மாணவி காணாமல் போனதாக அம்மாவும், தாத்தாவும் புகார் தருகிறார்கள். இந்த வழக்கை விசாரிக்க சம்பவ இடத்துக்குச் செல்லும் போது, அவரது எல்லைக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ‘ஐம்பொன் டிராவல்ஸ்’ என்ற ஆம்னி பேருந்தில் ஓர் இளம்பெண் தாக்கப்பட்டதாக புகார் வருகிறது. அங்கு விரைந்து சென்று அந்த ‘ஐம்பொன் டிராவல்ஸ்’ ஆம்னி பஸ்ஸை மடக்கி பிடிக்கிறார் காஸ்ட்ரோ. ஆனால், பஸ்ஸில் ஒரு இளைஞர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவருகிறது. இந்த இளைஞரை கொலை செய்தது யார்? பேருந்தில் தாக்கப்பட்ட பெண் யார்? எங்கே? காணாமல் போனதாக புகார் வந்த பெண்ணிற்கும் என்ன தொடர்பு என்பதை விசாரிக்க ‘ஐம்பொன் டிராவல்ஸ்’ ஆம்னி பஸ் ஓட்டுனர், டிரைவர் மற்றும் அனைத்து பயணிகளும் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, ஒவ்வொருவராக விசாரித்து ஒவ்வொரு துப்பையும் அவிழ்க்கும் போது, ஒரு தீவிரமான குற்ற-திரில்லராக அனைத்து கேள்விகளுக்கும் ஒரே இரவில் விடை கிடைப்பது தான் டென் ஹவர்ஸ் படத்தின் மீதிக்கதை.
சிபிராஜ் இன்ஸ்பெக்டர் காஸ்ட்ரோவாக ஆரம்பம் முதல் இறுதி வரை முழுப் படத்தையும் தாங்கிச் செல்லும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் தீவிரமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
எஸ்ஐ மணியாக கஜராஜ் சிபிராஜ் உடன் பயணித்து நேர்த்தியான நடிப்பு தந்து திரைக்கதைக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளார்.
ஆம்னி பஸ் கிளீனர் மாரியாக முருகதாஸ், ஜீவாவாக ராஜ் அய்யப்பா, தங்கதுரை, டாக்டராக வரும் ஜீவா ரவி, சரவணசுப்பையா, உதயா, சருமிஷா நிரஞ்சனா உட்பட அனைவரும் கிடைத்த வாய்ப்புக்கு நியாயம் செய்துள்ளனர்.
வில்லனாக திலீபன் கதாபாத்திரம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வில்லை.
டெக்னிக்கல் குழுவில், டென் ஹவர்ஸ் கே.எஸ். சுந்தரமூர்த்தி இசை, ஜெய் கார்த்திக் ஒளிப்பதிவு, லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் மற்றும் அருண்ஷங்கர் துரை கலை இயக்கம் ஆகியோரின் பங்களிப்பு நிறைய உணர்ச்சிகரமான மற்றும் சிலிர்ப்பூட்டும் தருணங்களைக் கொண்ட ஒரு பரபரப்பான த்ரில்லராக இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான தெளிவான ரன்னிங் டைமுடன் திரைக்கதைக்கு விறுவிறுப்பை கூட்டி உள்ளது.
வழக்கமான குற்ற-த்ரில்லர் கதையை, ஒரே இரவில் என்னென்ன நடக்கிறது என திரைக்கதை அமைத்து பார்வையாளர்கள் யூகிக்க முடியாத பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக காட்சிபடுத்தி உள்ளார் இயக்குநர் இளையராஜா கலியபெருமாள்.
மொத்தத்தில் டூவின் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் லதா பாலு மற்றும் துர்கைனி வினோத் ஆகியோர் தயாரித்துள்ள டென் ஹவர்ஸ் ஒரு தீவிரமான க்ரைம் த்ரில்லர்.