Chennai City News

டீன்ஸ் சினிமா விமர்சனம் : டீன்ஸ் வித்தியாசமான புது முயற்சி | ரேட்டிங்: 2.5/5

டீன்ஸ் சினிமா விமர்சனம் : டீன்ஸ் வித்தியாசமான புது முயற்சி | ரேட்டிங்: 2.5/5

நடிகர்கள்:
– ஜனார்த்தனனாக ராதாகிருஷ்ணன் பார்த்திபன்
– தணிகாசலமாக யோகி பாபு
– ஆதித்யனாக தீபேஸ்வரன் ஜி
– அஃபிலாக பிராங்கின்ஸ்டன்
– கே.எஸ். அய்யன்காளியாக தீபன்
– அபூர்வாவாக விஸ்ருதா ஷிவ்
– திலனாக எல்.ஏ.ரிஷி ரத்னவேல்
– சில்வென்ஸ்டன் நசூஃபிலாக
– நைனிகாவாக அஸ்மிதா மகாதேவன்
– நக்ஷத்ராவாக டி.அம்ருதா
– உதயபிரியன். நிஷாந்தாக கே
– சாராக பி.கிருத்திகா
– சர்வேஷாக டி.ஜான் போஸ்கோ
– ஷானாக ரோஷன்
– டீனாவாக பிரஷிதா நசீர்

தொழில்நுட்ப குழு:
கருத்தரித்தது மற்றும் வடிவமைக்கப்பட்டது: ராதாகிருஷ்ணன் பார்த்திபன்
இசையமைப்பாளர்: டி. இம்மான்
ஒளிப்பதிவு: கேவெமிக் ஆரி
அதிரடி – ஸ்டண்ட் சில்வா ஃ முகேஷ்
விளம்பர வடிவமைப்பாளர் – கண்ணதாசன் டி.கே.டி
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்கள்: கீர்த்தனா பார்த்தீபன் அக்கினேனி
தயாரிப்பாளர்கள்: கால்டுவெல் வேல்நம்பி, டாக்டர் பாலா சுவாமிநாதன், டாக்டர் பிஞ்சி சீனிவாசன், ரஞ்சித் தண்டபாணி மற்றும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்.
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்

பதின்மூன்று வயதினரைக் கொண்ட குழு தங்கள் முதிர்ச்சியை தங்கள் பெற்றோரிடம் நிரூபிப்பதில் டீன்ஸின் துவங்குகிறது. இந்த குழு அவர்களின் வயது வந்த சுதந்திரத்திற்காக ஏங்கி தங்கள் பெற்றோருக்கு குழந்தைகள் இல்லை என்பதை நிரூபிக்க  துடிக்கின்றனர். எனவே அவர்கள் வகுப்பில் இருந்து ஆசிரியருக்கு தெரியாமல் வகுப்பை பங்க் அடித்து, அவர்களின் ஒருவரின் பாட்டியின் கிராமத்திற்கு பயணத்தை தொடங்குகிறார்கள். அவர்கள் நகர எல்லையை கடப்பதற்கு முன்பே, ஒரு பேருந்து வேலை நிறுத்தம் அவர்களின் திட்டங்களை சிக்கலாக்கும் போது, அவர்களின் எதிர்ப்பானது அவர்களை இன்னும் ஆபத்தான பகுதிக்குள் தள்ளுகிறது, மர்மமான சூழ்நிலையில் அந்தப் பயணத்தில் ஒருவர் பின் ஒருவராக காணாமல் மாயமாகின்றனர். மீதமுள்ளவர்கள் அவர்கள் எங்கு சென்றார்கள் என்ற குழப்பத்தில் இருக்கும் போது அவர்கள் கண் முன்னே குழுவில் இருந்து ஒருவர் சிறிய உருவமாக மாறி மாயம் ஆனதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். இதற்கு என்ன காரணம்?  எதற்க்காக எப்படி காணாமல் போகிறார்கள்? காணாமல் போனவர்கள் என்ன ஆனார்கள்? மீதிக்கதை பதில் சொல்லும்.

இன்றைய காலகட்டத்தில் இருக்கும் ஒரு சில வசதி படைத்த மற்றும் நடுத்தர மக்களின் பிள்ளைகள் வயதுக்கு மீறிய பேச்சும், நடவடிக்கைகள் அப்படியே படத்தில் நடித்த சிறுவர், சிறுமியர்கள் தீபேஸ்வரன் ஜி, பிராங்கின்ஸ்டன், தீபன், விஸ்ருதா ஷிவ், ரிஷி ரத்னவேல், சில்வென்ஸ்டன், அஸ்மிதா மகாதேவன், டி.அம்ருதா, உதயபிரியன், பி.கிருத்திகா, டி.ஜான் போஸ்கோ, ரோஷன், பிரஷிதா நசீர் ஆகியோர் அந்த கதாபாத்திரங்களாகவே பிரதிபலித்துள்ளனர். இருந்தாலும் இயக்குனர் வயதுக்கு மீறய பேச்சும் மற்றும் ஒரு சில நெருடலான காட்சிகள் காட்சிப்படுத்தி இருப்பது இன்றைய சூழ்நிலைக்கு தவறான உதாரணமாக அமைந்துள்ளது.

படத்தின் பிற்பாதியில் வரும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் வழக்கமான நக்கல் நையாண்டி ஒதுக்கி வைத்து விட்டு வித்தியாசமான கெட்டப்பில் விஞ்ஞானி ஜனார்த்தனனாக, அவரின் கதாபாத்திர தேர்வு அருமை.

தணிகாசலமாக யோகி பாபு சும்மா வந்து போகிறார் தவிர அவரது இருப்பு கதை நகர்வுக்கு எந்த விதத்திலும் பயன்பட  வில்லை.

டி. இம்மான் இசை, கேவெமிக் ஆரி ஒளிப்பதிவு பார்த்திபன் புது முயற்சிக்கு பலம் சேர்த்துள்ளது.

எப்போதும் வித்தியாசமான முயற்சிகள் சினிமாவில் எடுத்து வரும் பார்த்திபன் இம்முறை வழக்கமான கமர்ஷியல் பார்முலாவை எடுத்து திரைக்கதையில் அமானுஷ்யம் மற்றும் அறிவியலையும் புகுத்தி இருப்பது புது முயற்சி. சிறுவர், சிறுமியர்களை வைத்து பட்ஜெட் க்கு ஏற்றவாறு தொழில்நுட்பத்தை பயன்படுத்திய விதம் பாராட்டத்தக்கது. இருந்தாலும் திரைக்கதையில் அறிவியல் சம்பந்தப்பட்ட காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாகவும், திரிலிங்காகவும் இருந்து இருக்கும்.

மொத்தத்தில் கால்டுவெல் வேல்நம்பி, டாக்டர் பாலா சுவாமிநாதன், டாக்டர் பிஞ்சி சீனிவாசன், ரஞ்சித் தண்டபாணி மற்றும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இணைந்து தயாரித்துள்ள டீன்ஸ் வித்தியாசமான புது முயற்சி.

Exit mobile version