ஜின் தி பெட் சினிமா விமர்சனம் : ஜின் தி பெட் குழந்தைகளின் பொறுமையை சோதிக்கும் | ரேட்டிங்: 2.5/5
டி ஆர் பாலா மற்றும் அனில் குமார் ரெட்டி தயாரிப்பில் வெங்கடாச்சலம் இணை தயாரிப்பில் ஃபேரி டேல் பிக்சர்ஸ், ஏ ஆர் டூரிங் டாக்கீஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் விஜிவி கிரியேஷன்ஸ் மற்றும் சினிமாரஸா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து வழங்கும் ஜின் தி பெட் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தயாரிப்பாளர் டி.ஆர் பாலா.
நடிகர்கள் : முகேன் ராவ் – சக்தி, பவ்யா திரிகா – பிரியா , வடிவுக்கரசி – அபிதகுஜாலம்பால், பாலசரவணன் – பரன்ஜோதி, ராதா ரவி – மனோகர், நிழல்கள் ரவி – ராதா கிருஷ்ணன், வினோதினி – கீதா, சக்தி தந்தை – இமான் அண்ணாச்சி, ரித்விக் – சிம்பு ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஓளிப்பதிவு- அர்ஜுன் ராஜா, இசை இயக்குனர் – விவேக் மெர்வின், எடிட்டர் – தீபக், கலை இயக்குனர் – தினேஷ் குமார், ஸ்டண்ட் மாஸ்டர் – பிரதீப் தினேஷ் , ஒலி வடிவமைப்பு – டி உதயகுமார், வி.எஃப்.எக்ஸ் – விபின் விஜயன், வண்ணம் – சண்முகா பாண்டியன், ஆடை வடிவமைப்பாளர் – தீப்தி, பிஆர்ஒ – நிகில் முருகன்.
படத்தின் தொடக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேஷியாவில் இருக்கும் இஸ்லாமிய பேய் விரட்டும் இடத்தில் ஒரு கொடிய ஜின்-னை ஒரு பெண் உடலில் இருந்து, சில மந்திரங்கள் செய்து பிரித்து பாதுகாப்பாக ஒரு கூண்டில் அடைக்கின்றனர், கதை அப்படியே தற்போது உள்ள நிகழ் காலகட்டத்தில் பயணிக்கிறது. சக்தி (முகேன் ராவ்) மலேசியாவில் ஒரு மியூசிக் பேண்டடில் இசைக்கலைஞராக வேலை பார்த்து வருகிறார். காதல் தோல்வி மற்றும் பணிக்காலம் முடிந்த நிலையில் குடும்பத்தினருக்கு பரிசு பொருட்கள் வாங்கச் செல்லும் இடத்தில் ஒரு அதிசய பெட்டியை பார்க்கிறார். அதில் ஜின் என்னும் பேய் இருப்பதை கடைக்காரர் கூறுகிறார். பின் அந்த ஜின் பற்றிய கதையை கூறுகிறார். அதாவது மனிதர்களை பாதுகாக்க பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் மன்னர்கள் தங்கள் பாதுகாப்பிற்காகவும் போரில் வெற்றி பெற உதவ வேண்டும் ஜின்கள் படைக்கப்பட்டன. நல்ல ஜின்கள் தன் எஜமானனிடம் விசுவாசமாக இருந்து அவர்களை பாதுகாக்கும், நாளடைவில் விரோதிகளால் கெட்ட ஜின்களும் படைக்கப்பட்டன. அவையின் ஆக்ரோஷம் கொடூரமானதாக இருக்கும் உயிரை எடுக்கும் என்று அதன் வரலாற்றை சொல்லி இது ஒரு அதிர்ஷ்டப் பேய் கூற அதை சக்தி வாங்க ஆசைப்படுகிறார். கடைக்காரர் மூன்று முக்கிய விதிகளுடன் (தண்ணீர் படக்கூடாது, சூரிய ஒளி படக்கூடாது, நள்ளிரவு 12 மணி முதல் 5 மணிக்குள் உணவு வைக்க வேண்டும்) முழுமையான மாய ஜின், சக்திக்கு கொடுத்து அனுப்புகிறார். ஊருக்குத் திரும்பும் சக்தி ஒரு மாயப் பெட்டியில் அடைக்கப்பட்ட நல்ல ‘ஜின்’னுடன் தன் வீட்டுக்கு வருகிறார். ஜின்னின் உதவியுடன் தனது அதிர்ஷ்டத்தை மாற்ற முடியும் என்று அவர் நினைக்கிறார், ஆரம்பத்தில் சக்திக்கு நல்லது நடக்கிறது. ஆனால் போகப்போக விஷயங்கள் குழப்பம் அடைகிறது. வீட்டில் திடீர் துயரங்களும், அவரது குடும்பத்தினருக்கு பிரச்சனைகள் ஏற்பட அவர்களுக்குள் பயம் பரவுகிறது. முதலில் பாட்டி, அடுத்து கர்ப்பிணி சகோதரியின் கெட்ட கனவுகள், அவருடைய குடும்பத்தினர் அனைவருக்கும் துன்பத்தை கொடுக்க, அவருடைய குடும்பத்தினர் அனைவருக்கும் துன்பத்தை அனுபவிக்கும் போது, சக்தியின் காதல் மனைவி ப்ரியா (பவ்யா டிரிகா) ரத்தக் காயத்தில் மயங்கி கிடக்க, அந்த கொலை முயற்சிக்கு ஜின் தான் காரணம் என எல்லோரும் சந்தேகிக்கின்றனர். கோபம் அடைந்த சக்தி அந்த ஜின்-யை ஒரு கட்டத்தில் முகேன் வெளியே தூக்கி எறிகிறார். சூரிய ஒளி பட்ட அந்த ஜின், இறுதியாக உருவெடுக்கும் போது, என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
முகேன் ராவ் துடிப்பான உடல்மொழியுடன் தனது இருப்பை பதிவு செய்துள்ளார். வழக்கமான நாயகி பாத்திரத்தில் பரியாவாக பவ்யா திரிகா, பாட்டி அபித குஜாலம்பாவாக வடிவுக்கரசி, நண்பன் பரஞ்ஜோதியாய் பாலசரவணன், ராதா கிருஷ்ணனாக நிழல்கள் ரவி, வில்லன் மனோகராக ராதா ரவி, – சகோதரி கீதாவாக வினோதினி, சிம்புவாக ரித்விக், தந்தையாக – இமான் அண்ணாச்சி ஆகியோர் நேர்த்தியான நடிப்பு வழங்கி உள்ளனர்.
தொழில்நுட்ப ரீதியாக ஓளிப்பதிவு- அர்ஜுன் ராஜா, இசை விவேக் மெர்வின், எடிட்டர் – தீபக், கலை இயக்குனர் – தினேஷ் குமார், ஸ்டண்ட் மாஸ்டர் – பிரதீப் தினேஷ், ஒலி வடிவமைப்பு – டி உதயகுமார், வி.எஃப்.எக்ஸ் – விபின் விஜயன், வண்ணம் – சண்முகா பாண்டியன், ஆடை வடிவமைப்பாளர் – தீப்தி, திரைக்கதை நகர்வுக்கு நன்றாகவே கைகொடுத்து உள்ளனர்.
ஜின் என்று பேயை கொண்டு நாம் பார்த்து பழகிய கதை களத்தில், அதிர்ஷ்டம், நாயகியின் மர்மமான பெற்றோர், சதித்திட்ட நிறுவன வாரிசுகள் மற்றும் மருத்துவமனை கொலை உள்ளடக்கிய திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் டி.ஆர்.பாலா. திரைக்கதையில் குழந்தைகளை ஈர்க்கும் வகையில் ஜின்னின் கதாபாத்திரத்தை இயக்குனர் கலகலப்புடன் வடிவமைத்திருந்தால் ஜின் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.
மொத்தத்தில் டி ஆர் பாலா மற்றும் அனில் குமார் ரெட்டி தயாரிப்பில் வெங்கடாச்சலம் இணை தயாரிப்பில் ஃபேரி டேல் பிக்சர்ஸ், ஏ ஆர் டூரிங் டாக்கீஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் விஜிவி கிரியேஷன்ஸ் மற்றும் சினிமாரஸா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து வழங்கும் ஜின் தி பெட் குழந்தைகளின் பொறுமையை சோதிக்கும்.