‘ஜான் ஆகிய நான்’ விமர்சனம் : ஜான் ஆகிய நான் வித்தியாசமான முயற்சி | ரேட்டிங் 2.5/5
நடிகர்கள் : அப்பு கே.சாமி, அருள் அன்பழகன், நிழல்கள் ரவி, பவர் ஸ்டார் சீனிவாசன், நக்ஷத்ரா,
இசை : 311 ஸ்டுடியோஸ்
ஒளிப்பதிவு : கவியரசன்
இயக்கம் : அப்பு கே.சாமி
தயாரிப்பு : சுப்பிரமணியன்.எஸ்
டார்க் லைட் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுப்பிரமணியன்.எஸ் தயாரிப்பில், அப்பு கே.சாமி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பதோடு ஹீரோவாகவும் நடித்திருக்கும் படம் ‘ஜான் ஆகிய நான்’.
ஒரு கிராமத்தில் 44 பேர் கொலை செய்யப்படுகிறார்கள். யாருக்கும் தெரியாத அந்த கொலை சம்பவத்தின் பின்னணி குறித்து தொலைக்காட்சி ஒன்றில் அந்த கிராமத்தை சேர்ந்த அருள் அன்பழகன் விவரிக்கிறார். எதற்காக 44 பேர் கொல்லப்பட்டார்கள்? கொலை செய்யப்பட்டவர்கள் யார்? கொலை செய்தது யார்? போன்ற கேள்விகளுக்கு அருள் அன்பழகன் கொடுக்கும் பதில்கள் உண்மையா? என்பதை ஆராயாமல் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்வதோடு, அந்த வழக்கில் சம்மந்தப்பட்ட போலீஸ் அதிகாரியான நாயகன் அப்பு கே.சாமியிடம் விளக்கம் கேட்கிறது. இதற்காக களத்தில் இறங்கும் அப்பு கே. சாமி, அருள் அன்பழகன் கூறிய தகவல்கள் அனைத்தும் பொய் என்பதை தெரிந்து கொள்வதுடன் கொலை சம்பவத்தின் உண்மையான பின்னணி என்ன? என்பதைக் கண்டுபிடித்து விவரிப்பதுதான் இந்தப் படத்தின் கதை. 311 OTT மற்றும் 311channeldotcom என்ற இணையத்தில் நேரடியாக வெளியாகியிருக்கும் இப்படத்தை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.
Watch Movie at 311 Channel OTT Platform : (Free) Channel Link : www.311channel.com App link : https://play.google.com/store/apps/de… User Details username : preview@311channel.com password : 270820222000 Free purchase coupon code : 5555
சமூகத்தால் நிராகரிக்கப்பட்ட இளைஞர்களை சமூக விரோத கும்பல்கள் எப்படி பயன்படுத்திக் கொள்கிறது? என்பதையும், ஊடகங்களில் வெளியாகும் பொய் எப்படி..? உண்மையாகி விடுகிறது என்பதையும் மிக அழுத்தமாக சமூக அக்கறையோடு சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் அப்பு கே.சாமி. ஆனால், திரைக்கதையில் கொஞ்சம் தடுமாறியதால் அவர் நினைத்ததை சொல்லிய விதம் புரியாதபடி இருக்கிறது.
மொத்தத்தில் டார்க் லைட் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுப்பிரமணியன் எஸ் தயாரித்துள்ள ஜான் ஆகிய நான் வித்தியாசமான முயற்சி.