சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் சினிமா விமர்சனம்

0
271

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் சினிமா விமர்சனம் : சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் – நகைச்சுவை இருக்கு ஆனால் பார்வையாளர்களிடையே சிரிப்பு அலை இல்லை | ரேட்டிங்: 2/5

நடிகர்கள் :- வைபவ், அதுல்யா ரவி, மணிகண்டா ராஜேஷ், ஆனந்த் ராஜ், இளவரசு, ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், சுனில் ரெட்டி, லிவிங்ஸ்டன், பிபின், ஷிஹான் ஹ{சைனி, சூர்யா கணபதி, சாம்ஸ் மற்றும் பலர்.
தொழில்நுட்ப கலைஞர்க​ள் :-
தயாரிப்பாளர் : பாபி பாலச்சந்திரன்
தயாரிப்பு நிறுவனம் : பி. டி. ஜி யுனிவர்சல்
வியூகத் தலைமையாளர் : டாக்டர் மனோஜ் பெனோ
எழுத்து மற்றும் இயக்கம் : விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ்
இசை : டி. இமான்
பாடல் வரிகள் : கார்த்திக் நேத்தா, கருணாகரன், சூப்பர் சுப்பு, ஆஃப்ரோ
ஒளிப்பதிவு : டிஜோ டோமி
படத்தொகுப்பு : சுரேஷ்  யு  பிரசாத்
தயாரிப்பு வடிவமைப்பாளர் : அருண்சங்கர் துரை
ஆடை வடிவமைப்பு : தக்ஷா தயாள்
ஒப்பனை : அப்துல்லா
சண்டைப் பயிற்சி : ‘டான்’ அசோக்
நடனம் : அஜய் ராஜ்
தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் : மணிகண்டன்
தயாரிப்பு நிர்வாகி : வேணுகோபால்
மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அஹ்மத், பாரஸ் ரியாஸ்

சட்ட விரோத செயலில் ஈடுபடும் பசுபதியை (லிவிங்ஸ்டன்) போலீஸ் துரத்தும் போது அனாதை சிறுவர்கள் பாண்டி (வைபவ்) மற்றும் பூச்சி (மணிகண்டன்) அவரை போலீசில் சிக்காமல் காப்பாற்றியதும் இருவரையும் தனது சொந்த மகனாகவே பாவித்து தனது பீட்சா கடையில் வேலைக்கு வைத்து வளர்க்கிறார். இளைஞர்களாக வளர்ந்த பின் இருவரும் சிறிய அளவிலான திருட்டுகளில் ஈடுபட்டு போலீஸ் இடம் சிக்குவார்கள். பசுபதி இருவரையும் போலீஸ் இடம் இருந்து விடுவித்து தன் வீட்டிற்கு அழைத்து வருகிறார். அங்கு வெளிநாட்டில் படித்துவிட்டு இந்தியாவிற்கு திரும்பிய பசுபதியின் பெண்ணான ஜென்னி (அதுல்யா ரவி) அவர்கள் சந்திக்கிறார்கள். பாண்டி ஜென்னியை கண்டதும் காதலிக்க கொள்கிறார். இந்நிலையில், காப்பீடு தொகைக்கு ஆசைப்பட்டு, காப்பீடு பணத்தை ஆட்டையைப் போட தனது வீட்டில் கொள்ளையடிக்குமாறு பசுபதியை அவரது முதலாளியான சலீம் (ஷிஹான் ஹுசைனி) கேட்கிறார். பசுபதி இந்த போலி கொள்ளையை செய்வதற்காக பாண்டியையும், பூச்சியையும் அனுப்பி வைக்கிறார். கொள்ளை அடித்த பின் இருவரையும் வேறு ஓர் இடத்திற்கு செல்லும் படி கட்டளை இடுகிறார். பாண்டியும் பூச்சியும்  கொள்ளையடித்து விட்டு திரும்பும் வழியில் ஒரு ஒரு பாரில் போதையில் கொள்ளையடித்த பணத்தை தொலைத்து விடுகிறார்கள். இந்த பணத்தை உரிய நேரத்தில் ஒப்படைக்க விட்டால் பசுபதி குடும்பத்திற்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்று அவர்களுக்கு தெரியும். இதனால் அந்த பணத்தை எப்படியாவது திருப்பி கொடுக்க வேண்டும் என்று அவர்கள் மண்டை கோளாறு (ரெடின் கிங்ஸ்லி) மூலம் ஸ்பிளிட் சூசை (ஆனந்தராஜ்), மெமரி தாஸ் (மொட்டை ராஜேந்திரன்), குடி குமார் (சுனில் ரெட்டி), டமார் லால் (ஜான் விஜய்), ஆகியோருடன் கூட்டணி சேர்கிறார்கள். இந்த பலதரப்பட்ட குழுவினர் ஒன்றாக சேர்ந்து, அந்தப் பணத்தை குறிப்பிட்ட நாட்களுக்குள் திருப்பித் தருவதற்காக ஒரு குறிப்பிட்ட வங்கியை கொள்ளையடிக்க திட்டமிடுகின்றனர். இந்த கும்பல் ஏன் ஒரு குறிப்பிட்ட வங்கியை கொள்ளையடிக்கிறார்கள்? அதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? இல்லையா? தொலைந்த பணம் மீண்டும் கிடைத்ததா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

வைபவ், அதுல்யா ரவி, மணிகண்டா ராஜேஷ், ஆனந்தராஜ், இளவரசு, ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், சுனில் ரெட்டி, லிவிங்ஸ்டன், பிபின், ஷிஹான் ஹ{சைனி, சூர்யா கணபதி, சாம்ஸ் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து, நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்ட சிரிப்பே வராத திரைக்கதைக்கு முடிந்த அளவுக்கு சிறப்பான நடிப்பு மூலம் கலகலப்பாக வைக்க முயற்சித்துள்ளனர்.

டி. இமானின் இசை மற்றும் பின்னணி இசை சுமார் ரகம். ஒளிப்பதிவாளர் டிஜோ டோமி காட்சி கோணங்கள் சற்று ஆறுதல் அளிக்கிறது. படத்தொகுப்பாளர் சுரேஷ் ஏ பிரசாதத்தின் எடிட்டிங் இரண்டாம் பாதி ஓகே.

வங்கிக் கொள்ளைகள் பற்றி ஏற்கனவே பல வெற்றிகரமான படங்கள் வந்துள்ளன. அதே பாதையை பின்பற்றி, இயக்குனர்கள் விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் ஆகியோர் வங்கிக் கொள்ளையை மையக் கருப்பொருளாகக் கொண்டு, திரைக்கதையில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து, பல அனுபவம் வாய்ந்த நகைச்சுவை நடிகர்களை வைத்து சிரிப்பே வராத சுவாரஸ்யமற்ற நகைச்சுவை காட்சிகளுடன் இயக்கி உள்ளனர்.

மொத்தத்தில் பி.டி ஜி யுனிவர்சல் சார்பில் பாபி பாலச்சந்திரன் தயாரித்திருக்கும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் – நகைச்சுவை இருக்கு ஆனால் பார்வையாளர்களிடையே சிரிப்பு அலை இல்லை.