சாலா சினிமா விமர்சனம் : சாலா மதுப்பழக்கம் பொதுமக்களின் வாழ்க்கை சீரழிக்கிறது என்பதை உணர கண்டிப்பாக மதுப்பிரியர்கள் உட்பட அனைவரும் பார்க்க வேண்டிய படம்| ரேட்டிங்: 3/5
பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் டி.ஜி.விஸ்வபிரசாத், விவேக் குச்சிபோட்லா இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் சாலா. எஸ்.டி.மணிபால் எழுதி இயக்கியுள்ளார்.
நடிகர்கள் :
சாலாவாக தீரன்
புனிதாவாக ரேஷ்மா வெங்கடேஷ்
தங்கதுரையாக சார்லஸ் வினோத்
டாஸ்ஸாக ஸ்ரீநாத்
குணாவாக அருள்தாஸ்
தொழில்நுட்ப கலைஞர்கள் :
தயாரிப்பு – மக்கள் ஊடக தொழிற்சாலை
தயாரிப்பாளர் – டி ஜி விஷ்வ பிரசாத்
இணை தயாரிப்பு – விவேக் குச்சிபோட்லா
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – வி. ஸ்ரீ நட்ராஜ்
நிர்வாகத் தயாரிப்பாளர் – விஜய ராஜேஷ்
இயக்குனர் – எஸ்டி மணிபால்
ஒளிப்பதிவு – ரவீந்திரநாத் குரு
இசையமைப்பாளர் – தீசன்
ஆசிரியர் – புவன்
கலை இயக்குனர் – வைரபாலன்
ஸ்டண்ட் – மகேஷ் மேத்யூ மற்றும் ரக்கர்ராம்
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்
கதையின் நாயகனாக அறிமுகமாகும் தீரன் இந்தப் படத்தில் நன்கு கட்டமைக்கப்பட்ட உடலமைப்புடன் முரட்டுத்தனமானவனாகவும், குணாவிற்கு நம்பிக்கைக்குரிய வனாகவும் சாலமன் (எ) சாலாவாக கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். நடனம் மற்றும் அதிரடி காட்சிகளில் கவனம் பெறுகிறார்.
அறிமுக நாயகி ரேஷ்மா வெங்கடேஷ், மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வரும் புனிதா கதாபாத்திரத்தில் நம்பகமான வசனங்களுடன் நேர்மையைக் கொண்டு வருகிறார்.
சாலாவின் உயிர் நண்பனாக ஸ்ரீநாத், ஊழல் இன்ஸ்பெக்டராக சம்பத் ராம், வில்லன் தங்கதுரையாக சார்லஸ் வினோத் உள்ளிட்ட அனைத்து துணை நடிகர்கள், பார்வையாளர்களின் ஆர்வத்தை தக்க வைக்கும் வகையில் திடமான நடிப்பை வழங்குகிறார்கள்.
மதுப் பழக்கம் காரணமாக சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் குறித்தும், அதனால் ஏற்படும் விளைவுகள் மற்றும் ஒரு ஒயின் ஷாப்பை குத்தகைக்கு எடுக்கும் பிரச்சினையில் இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்படும் மோதலும், பகை என திரைக்கதை அமைத்து பார்வையாளர்கள் மத்தியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி நல்ல மெசேஜ் உடன் கமர்ஷியல் ஆக்ஷன் கலந்து சிறந்த தொழில்நுட்ப பங்களிப்புடன் மிக யதார்த்தமாக சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் எஸ்.டி.மணிபால்.
மொத்தத்தில் பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் டி.ஜி.விஸ்வபிரசாத், விவேக் குச்சிபோட்லா இணைந்து தயாரித்துள்ள சாலா மதுப்பழக்கம் பொதுமக்களின் வாழ்க்கை சீரழிக்கிறது என்பதை உணர கண்டிப்பாக மதுப்பிரியர்கள் உட்பட அனைவரும் பார்க்க வேண்டிய படம்.