கீனோ சினிமா விமர்சனம் : கீனோ வித்தியாசமான சைக்காலஜிக்கல் த்ரில்லர் | ரேட்டிங்: 3/5
கந்தர்வா செல்லுலாய்ட்ஸ் கிரியேட்டர்ஸ் சார்பில் கிருத்திகா காந்தி தயாரித்து, ஆர்.கே. திவாகர் இயக்கி இருக்கும் படம் கீனோ.
நடிகர்கள்: மகாதாரா பகவத், மாஸ்டர் கந்தர்வா, ரேணுகா சதீஷ், கண்ணதாசன், ராஜேஷ் கோபிஷெட்டி, மாஸ்டர் சிவ சுகுந்த், சுந்தர் அண்ணாமலை, சிவம் மற்றும் பலர்.
படக்குழு :
தயாரிப்பு : கந்தர்வ செல்லுலாய்ட்ஸ் கிரியேட்டர்ஸ்
தயாரிப்பாளர் : கிருத்திகா காந்தி
கதை, திரைக்கதை, வசனம், பாடல் வரிகள், இசை, இயக்கம் : ஆர்.கே. திவாகர்
ஒளிப்பதிவு: ஆலிவர் டேனி
படத்தொகுப்பு : கிருத்திகா காந்தி
மக்கள் தொடர்பு : பெரு துளசி பழனிவேல்
மகாதாரா பகவத் மற்றும் ரேணு சதீஷ் தம்பதிக்கு அன்பான ஒரு 13 வயது மகன் கந்தர்வா என்று ஒரு அழகான சிறிய குடும்பம் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்துகிறார்கள். தாய் தந்தை இருவரும் வேலைக்கு செல்லக்கூடியவர்கள். இந்நிலையில், ஒரு நாள் இரவு மழை வரும்போல இருக்கிறது, மாடியில் இருந்து துணிகளை எடுத்து வா என தன் மகனை அனுப்புகிறார் தாய். மகனும் மாடிக் கொடியில் இருக்கும் துணிகளை எடுக்கும் போது, வித்தியாசமான முகமூடி அணிந்த ஒரு மர்ம உருவம்;, “நான்தான் கீனோ.. என்னோடு வா”, வந்து என்னை கட்டிப்பிடி என கரகரத்த குரலில் பயமுறுத்துகிறது. மாடியில் இருந்து பயந்து அவன் கீழே ஓடி வந்துவிடுகிறான். இதைப் கவனித்த அம்மா என்னவென்று விசாரிக்க. மகன் நடந்த விஷயத்தைச் சொல்கிறான். அம்மா, பக்கத்து வீட்டுக்காரங்க யாராவது வந்திருப்பாங்க.. என்று சொல்லி அவனை தூங்க வைக்கிறார். என்கிறார். ஆனால் அவன் தனியாக இருக்கும்போது, ஒரு பெரிய திறந்த வெளிக்கு செல்லும் போது, பள்ளி மேல் மாடி, விளையாட்டு மைதானம், சாலை என பல இடங்களில் கீனோ என்ற அந்த மர்ம உருவம் பயமுறுத்தி மறைந்து விடுகிறது. சிறிது நாட்களிலேயே பணி காரணமாக வெளிநாடு சென்று விடுகிறார் தாய் ரேணு சதீஷ். ஒரு கட்டத்தில் மகனுக்கு இருக்கும் இந்த பிரச்சினை பற்றி தந்தைக்கு தெரிய வர அவர் ஆன்மீக சக்திகளின் உதவி கொண்டு மகனை தீய சக்தி ஏதாவது தொந்தரவு செய்கிறதா என்று சோதிக்கிறார்கள். அப்படி ஒரு தீய சக்தி எதுவும் இல்லை என்று தெரியவருகிறது. அப்படி என்றால் கீனோ யார்? ஏன் கந்தர்வாவை பயமுறுத்துகிறது? உண்மையில் கந்தர்வாவுக்கு என்ன பிரச்சினை? அந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண பெற்றோர் என்ன செய்தார்கள் என்பதே மீதிக்கதை.
தந்தையாக வரும் மகாதாரா பகவத், அம்மாவாக ரேணு சதீஷ் மற்றும் 13 வயது மகனாக கந்தர்வா ஆகிய மூவரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு யதார்த்தமான நடிப்பு வழங்கியுள்ளனர்.
மேலும் ராஜேஷ் கோபிசெட்டி, மாஸ்டர் சிவ சுகுந்த், சுந்தர் அண்ணாமலை, கண்ணதாசன் மற்றும் சிவம் ஆகியோர் துணை வேடங்களில் தங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.
தொழில்நுட்ப ரீதியாக ஓலிவர் டெனியின் ஒளிப்பதிவு, கிருத்திகா காந்தியின் படத்தொகுப்பு, ஆர்.கே.திவாகர் இசை மற்றும் பின்னணி இசை ஆகியோரின் பங்களிப்பு கதையை முன்னோக்கி கொண்டு சென்று படத்திற்கு பலம் சேர்த்துள்ளன.
இதுவரை நாவல்களிலோ திரைப்படங்களிலும் சொல்லப்படாத கதை கருவும் கீனோ என்ற கதாபாத்திரத்தின் மூலம் முற்றிலும் மாறுபட்ட திரைக்கதை அமைத்து உள்ளார். நாம் ஒவ்வொருவரும் நம் குழந்தைப் பருவத்தில் நம்மை அறியாமலேயே ஒரு பய உணர்வை அனுபவித்திருக்க வேண்டும். இயக்குனர் ஆர்.கே. திவாகர் இந்தப் புதிய விஷயத்தை வித்தியாசமாக அணுக முயற்சித்துள்ளார். கடைசி 15 நிமிடங்கள் படத்தின் முக்கிய மையமாகும். திரைக்கதையில் உள்ள சலிப்பூட்டும் காட்சிகளைக் குறைத்து, சொல்லப்பட்ட இந்தக் கதையை இன்னும் தெளிவாகச் சொல்லி இருக்கலாம்.
மொத்தத்தில் கந்தர்வ செல்லுலாய்ட்ஸ் கிரியேட்டர்ஸ் சார்பில் கிருத்திகா காந்தி தயாரித்திருக்கும் கீனோ வித்தியாசமான சைக்காலஜிக்கல் த்ரில்லர்.