காலேஜ் ரோடு விமர்சனம் : காலேஜ் ரோடு கல்வி கடன் பெற்று படிக்கும் மாணவர்களும் கல்விக் கடன் வாங்கி படிக்கலாம் என்று நினைக்கும் மாணவர்களும் பார்க்க வேண்டிய முக்கியமான படம் | ரேட்டிங்: 3.5/5
இந்தப் படத்தில் லிங்கேஷ், மோனிகா, ஆனந்த் நாகு, அடாவடி அன்சர், அக்சய் கமல், பொம்மு லஷ்மி, நாடோடிகள் பரணி, மெட்ராஸ் வினோத், அருவி பாலா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஜெய் அமர்சிங், இசை -ஆப்ரோ, ஒளிப்பதிவு – கார்த்திக் சுப்ரமணியம், படத் தொகுப்பு – அசோக் ஹெச்.அந்தோணி, இணை இயக்கம் – சேகர், சண்டை இயக்கம் – பி.சி., நடன இயக்கம் – விஜி, ஒப்பனை – கார்த்திக் குமார், விளம்பர வடிவமைப்பு – லிங்கம் அழகர், புகைப்படங்கள் – ஆர்.எஸ்.ராஜா. மக்கள் தொடர்பு குணா.

காலேஜ் ரோடு என்பது மாணவர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் குறைவாக அறியப்பட்ட பிரச்சினையைப் பற்றிய த்ரில்லர்.
நாயகி மோனிகா, லிங்கேஷின் கிராம நண்பர்கள், சிறப்பு தோற்றத்தில் நாடோடிகள் பரணி, ஆகியோரின் கதாபாத்திரத்திற்கான வேலை குறைவு என்றாலும் கொடுத்த வேலையை உணர்ச்சிகரமான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
கார்த்திக் சுப்ரமணியம் ஒளிப்பதிவு, அசோக் ஹெச்.அந்தோணி படத் தொகுப்பு, ஆப்ரோவின் இசை மற்றும் பின்னணி இசை அவர்களின் பக்கபலம் சமூக அக்கறை கொண்ட முழுமையான பவர் பேக் திரைப்படமாக காலேஜ் ரோடு அமைந்துள்ளது.
பள்ளிப் படிப்பை முடித்த ஏழை, எளிய மாணவர்கள் தங்களின் கல்லூரிப் படிப்புக்கு முதலில் நாடுவது கல்விக் கடன் தான். ஆனால் அனைத்து ஏழை மாணவர்களுக்கு கல்விக் கடன் கிடைத்துவிடுவதில்லை. ஏழை மாணவர்களுக்கு கிடைக்காத கல்விக் கடன் பற்றியும் கல்விக் கடன் கொடுக்க வேண்டிய வங்கிகள் கடன் வாங்கிய மாணவர்களை எப்படி நடத்துகிறது என்பதை பற்றியும் வலுவான கதையம்சம் கொண்ட நல்ல கருவை, பரபரப்பான திருப்பங்களுடன் திரைக்கதை அமைத்து யாரும் எளிதில் யூகிக்க முடியாத ட்விஸ்ட் கொடுத்து சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர் ஜெய் அமர்சிங். முதல் பாதி கல்லூரி ரசனைகள் மற்றும் வேடிக்கை நிறைந்தது. 2வது பாதி வாழ்க்கையின் ரியாலிட்டி உணர்வுகளுடன் மாணவர்களின் கண்களைத் திறக்கும். சமூக அக்கறையுடன் காலேஜ் ரோடு திரைப்படத்தை சிறப்பாக கையாண்ட இயக்குனருக்கும் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.