கழுவேத்தி மூர்க்கன் திரைவிமர்சனம் : கழுவேத்தி மூர்க்கன் ஜாதி அரசியலுக்கு எதிராக களமிறங்கும் கழுகு பார்வை கொண்ட அரக்கன் | ரேட்டிங்: 4/5
அருள்நிதி நடிப்பில் இயக்குநர் SY.கௌதமராஜ் இயக்கியுள்ள படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’. இதில் துஷாரா விஜயன், சந்தோஷ் பிரதாப், சாயா தேவி, முனிஷ்காந்த், சரத் லோகித்சவா, ராஜசிம்மன், யார் கண்ணன், பத்மன், ஜக்குபாண்டி. மற்றும் பலர் நடித்துள்ளனர்.
டி.இமான் இசையமைக்க, ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ‘ஒலிம்பியா மூவீஸ்’ என்ற நிறுவனம் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரித்துள்ளார். மக்கள் தொடர்பு AIM.
ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இழிநிலையில் வாழும் தனது மக்கள் அதிலிருந்து முன்னேற வேண்டும். அதற்கு கல்வி அவசியம் என்பதை தனது மக்களுக்கு உணர்த்தி, கல்விக்காக வாதிடும் நற்பண்புடைய ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக வரும் சந்தோஷ் பிரதாப், அருள்நிதிக்கு இணையான அமைதியான மற்றும் எதிர்ப்பு குணம் கொண்ட இளைஞராக பூமிநாதன் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
வேட்டியும், கம்பீரமான மீசையுடன் ஆறடி தோற்றத்தில் வலம் வரும் முரட்டு ஆளை (அருள்நிதி) மிரட்டும் காட்சிகளிலும், அவருடனான காதல் காட்சிகளிலும் நடிப்பில் ஸ்கோர் செய்து ரசிக்க வைக்கிறார் துஷாரா விஜயன்.
ஒரு லோக்கல் அரசியல்வாதியாக சாதி வெறி பிடித்த மாவட்ட செயலாளர் கதாபாத்திரத்தில் ராஜசிம்மன், பதவி ஆசையும், சாதி வெறி பிடித்த மூர்க்கனின் அப்பாவாக யார் கண்ணன், மாமாவாக முனிஷ்காந்த், மாவட்ட எஸ்பியாக சரத் லோகித்சவா, முரட்டு இன்ஸ்பெக்டராக பத்மன், சந்தோஷ் காதலியாக சாயாதேவி, ஜக்குபாண்டி மற்றும் சுப்ரமணியன் போன்ற நடிகர்களும் குறிப்பிடத்தக்க அந்தந்த கதாபாத்திரங்கள் மூலம் ஒவ்வெருவரும் தங்களது சிறந்த பங்களிப்புகளை வழங்கி ஈர்க்கப்பட்டு கவனம் பெறுகிறார்கள்.
கணேஷ் குமாரின் மிரட்டரான சண்டைப் பயிற்சி, கிரமத்தின் அழகை கண்முன் நிறுத்திய ஸ்ரீதரின் ஒளிப்பதிவு, நாகூரான் ராமச்சந்திரன் படத் தொகுப்பு, டி இமானின் பின்னணி இசை என அனைத்து தொழில்நுட்ப அம்சங்கள் அழுத்தமான திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்துள்ளது.
தனது முதல் படமான ராட்சசி படத்தின் மூலம் சாதிவெறிக்கு எதிராக தனது வலுவான கருத்துக்களை பதிவு செய்த இயக்குனர் கௌதமராஜ், நிஜ உலக அரசியலை நேரடியாக குறிப்பிடும் ஒரு அழுத்தமான சமூக பிரச்சனையை மீண்டும் கையாண்டுள்ளார். ஆரம்பத்திலேயே, பல நூற்றாண்டுகளாக நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்கும் குறிப்பிட்ட தண்டனை முறையைப் பற்றி விளக்கி அதை அதிரடியான திரைக்கதையின் மூலம் வழங்கியுள்ளார்.
மொத்தத்தில் ‘ஒலிம்பியா மூவீஸ்’ சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரித்துள்ள கழுவேத்தி மூர்க்கன் ஜாதி அரசியலுக்கு எதிராக களமிறங்கும் கழுகு பார்வை கொண்ட அரக்கன்.