Site icon Chennai City News

கட்சிக்காரன் விமர்சனம்: கட்சிக்காரன் வலிமைமிக்க போராட்டக்காரன் | ரேட்டிங்: 2.5/5

கட்சிக்காரன் விமர்சனம்: கட்சிக்காரன் வலிமைமிக்க போராட்டக்காரன் | ரேட்டிங்: 2.5/5

பி.எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் மற்றும் பு@ஹில்ஸ் புரொடக்ஷன் இணைந்து தயாரித்திருக்கும் படத்தில் அப்புக்குட்டி, விஜித் சரவணன்,இயக்குநர் மருதுபாண்டியன், ஸ்வேதா டாரதி, சிவசேனாதிபதி, தெனாலி, ஜவகர், விஜய் கௌதம், சி.எம்.பிரபாகரன்,வின்சென்ட்ராய், குமர வடிவேலு,மாயி சுந்தர், ரமேஷ் பாண்டியன், பரந்தாமன், சாய்லட்சுமி, நந்தகுமார், சக்திவேல் முருகன் ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ப.ஐயப்பன்.ஒளிப்பதிவு- மதன்குமார், எடிட்டிங் – கார்த்திகேயன்,இசை-ரோஷன் ஜோசப், பின்னணி இசை-மகேந்திரா,பாடல்கள் நா. ராசா, பாடகர்கள் ஹரிச்சரண், பிஆர்ஒ- சக்தி சரவணன்.

தனது அபிமானமிக்க அரசியல் தலைவருக்காக முழு விசுவாசத்துடன் உழைக்கும் n;தாண்டன் விஜித் சரவணன். செலவுக்குப் பணம் இல்லாத போது கூட தன் மனைவியின் தாலியை அடகு வைத்து இரவு பகல் பாராது உழைக்கிறான். அவனது உழைப்பைப் பாராட்டி தேர்தலில் கவுன்சிலர் பதவியில் போட்டியிட வாய்ப்பு தரப்படுகிறது. ஆனால் கடைசி நேரத்தில் எதிர்க்கட்சியிலிருந்து கட்சி மாறிய ஒருவனுக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டு விடுகிறது. ஏமாற்றப்பட்டு சோர்வடைந்திருக்கும் வேளையில் தன் மனைவியின் உத்வேகமான அறிவுரையால் ஏமாற்றிய தலைவனிடம் நியாயம் கேட்டுப் போராடுகிறான். அது மட்டுமல்ல தன்னைப் போல ஏமாற்றப்பட்டவர்களை ஒன்று திரட்டி போராட அதிகார வர்க்கத்தின் மிரட்டலால் பலர் ஒதுங்கி கொள்ள மனஉறுதியோடு எதிர்த்து நிற்கிறான் விஜித் சரவணன். அதன் பிறகு விஜித் சரவணன் நியாயம் கிடைத்ததா? போராட்டம் வெற்றி பெற்றதா? என்பதுதான் கட்சிக்காரன் படத்தின் கதை.

எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் தொண்டனின் நிலை இது தான் என்பதை இந்த கதாபத்திரத்திற்கு வலிமை சேர்த்து, அரசியல்வாதியின் பேச்சை நம்பும் அப்பாவியாக விஜித் சரவணன் சிறப்பாக பங்களிப்பை கொடுத்துள்ளார்.
மனைவியாக ஸ்வேதா டாரதி அழகும், நடிப்பும் ஒருசேர கிராமத்து பெண்ணின் உறுதியான மனதைரியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மற்றும் அப்புக்குட்டி, இயக்குநர் மருதுபாண்டியன், சிவசேனாதிபதி, தெனாலி, ஜவகர், விஜய் கௌதம், சி.எம்.பிரபாகரன், வின்சென்ட்ராய், குமர வடிவேலு,மாயி சுந்தர், ரமேஷ் பாண்டியன், பரந்தாமன், சாய்லட்சுமி, நந்தகுமார், சக்திவேல் முருகன் மற்றும் பலர் படத்தின் காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளனர்.

மதன் குமார் ஒளிப்பதிவு செய்ய, ரோஷன் ஜோசப்,சி.எம். மகேந்திரா இசை அமைத்துள்ளது படத்திற்கு கூடுதல் பலம்.

அரசயலில் நடக்கும் பொய் வாக்குறுதிகள், ஏமாற்றங்களை சந்திக்கும் தொண்டர்கள் அதை தட்டிக் கேட்க வேண்டும், நியாயம் கிடைக்க போராட வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக தன் வசனங்களால் நிரப்பி படத்தை நிறைவாக இயக்கியிருக்கிறார் ஐயப்பன். திரைக்கதையில் இன்னும் அழுத்தும் கொடுத்து இயக்கியிருந்தால் இன்னும் தடம் பதித்திருக்கும்.

மொத்தத்தில் பி.எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் மற்றும் பு@ஹில்ஸ் புரொடக்ஷன் இணைந்து தயாரித்திருக்கும் கட்சிக்காரன்  வலிமைமிக்க போராட்டக்காரன்.

Exit mobile version