Site icon Chennai City News

‘ஒன் வே’ விமர்சனம் : ‘ஒன் வே’ அனைவரையும் உறைய வைக்கும் த்ரில்லர் படம் | ரேட்டிங்: 2.5/5

‘ஒன் வே’ விமர்சனம் : ‘ஒன் வே’ அனைவரையும் உறைய வைக்கும் த்ரில்லர் படம் | ரேட்டிங்: 2.5/5

ஜி குரூப் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபஞ்சன் தயாரிப்பில், எம்.எஸ்.சக்திவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘ஒன் வே’. இதில் கதையின் நாயகனாக பிரபஞ்சன் நடிக்க, கோவை சரளா, ஆரா, அப்துல்லா, சார்லஸ் வினோத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
முத்துக்குமரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு அஷ்வின் ஹேமந்த் இசையமைத்துள்ளார். சரண் சண்முகம் படத்தொகுப்பு செய்ய, அபிஷேக் தர்ஷன் சவுண்ட் மிக்ஸ் பணியை கவனித்துள்ளார். கார்த்திக் டிஐ பணியை கவனிக்க, விக்கி சண்டை காட்சிகள் வடிவமைத்துள்ளார்.
இயக்கம் : எம்.எஸ்.சக்திவேல்.
மக்கள் தொடர்பு : ஹஸ்வத் சரவணன்

அம்மா கோவை சரளா, தங்கை ஆரா ஆகியோருடன் வாழ்ந்து வரும் ஹீரோ பிரபஞ்சன், சரியான வேலை கிடைக்காமல் கஷ்டப்படுகிறார். விவசாயத்திற்காக வாங்கிய கடனுக்கான வட்டி ஒரு பக்கம் அதிகரிக்க, மறுபக்கம் நிரந்தரமான வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை செய்து கொண்டிருக்கிறார் நாயகன் பிரபஞ்சன். இதற்கிடையே, வட்டிக்கு பணம் கொடுக்கும் வினோத் சார்லஸ், கடனை திருப்பி கொடுக்க முடியாத குடும்பத்தில் இருக்கும் பெண்களை தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்துகிறார். அவரால் பல பெண்கள் பாதிக்கப்பட, நாயகனின் தங்கை மீது அவர் கண் வைக்கிறார். கடனை கொடுக்கவில்லை என்றால், பெண்ணை தன்னுடன் அனுப்பி வைக்க வேண்டும், என்று அடாவடி செய்யும் சார்லஸ் வினோத்தின் கடனை அடைப்பதற்காக நாயகன் பிரபஞ்சன் வெளிநாட்டுக்கு வேலைக்கு போக முடிவு செய்கிறார். அதற்காக தனது அப்பாவின் நினைவாக வைத்திருந்த தாலியை அம்மா கோவை சரளா விற்று அவரை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புகிறார். வெளிநாட்டுக்கு வேலைக்கு போக வேண்டிய நாயகன் பிரபஞ்சன், எதிர்பாராத சில பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வதால் வெளிநாட்டுக்கு போக முடியாமல் மும்பையில் சிக்கிக்கொள்ள, அதே சமயம் கையில் வைத்திருந்த பணத்தை இழந்துவிட்டதால் சொந்த ஊருக்கும் போக முடியாமல் தவிக்கிறார். இந்த நிலையில், நாயகன் பிரபஞ்சனுக்கு பணம் சம்பாதிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வாய்ப்பால் அவரது வாழ்க்கை எப்படி மாறுகிறது. அது என்ன வாய்ப்பு? கடைசியில் சொந்த ஊருக்கு திரும்பி சென்று குடும்ப கடனை அடைத்தாரா? இல்லையா ? என்பதே படத்தின் மீதி கதை.

நாயகனாக நடித்திருக்கும் பிரபஞ்சன், கிராமத்து கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி கதாபாத்திரமாகவே மாறி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி கிராமத்து பெண் போலவே இயல்பாக இருக்கிறார் நாயகனின் தங்கையாக நடித்திருக்கும் ஆராவுக்கு  பிரகாசமா எதிர்காலம் இருக்கு.
இன்றைய காலகட்டத்தில் சிறந்த குணச்சித்திர நடிகை கோவை சரளா தான் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது பங்களிப்பு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
அப்துல்லா, சார்லஸ் வினோத், பவா செல்லதுரை மற்றும் படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் படத்தின் வெற்றிக்கு கடினமாக உழைத்திருக்கிறார்கள்.
முத்துக்குமரன் ஒளிப்பதிவும், சரண் சண்முகம் படத்தொகுப்பும், அபிஷேக் தர்ஷன் சவுண்ட் மிக்ஸ், கார்த்திக் டிஐ மற்றும் விக்கி சண்டை காட்சிகள் திரைக்கதை ஓட்டத்திற்கு கூடுதல் பலம்.
அஷ்வின் ஹேமந்த் இசை மற்றும் பின்னணி  இசையும் மிக சிறப்பாக உள்ளது. எந்த இடத்தில் இசை வர வேண்டும், எந்த இடத்தில் இசை இல்லாமல் மவுனமாக இருக்க வேண்டும், என்பதை அஷ்வின் மிக தெளிவாக செய்திருக்கிறார்.
‘ஒன் வே’ படம் தொழில்நுட்ப ரீதியாக தரமான படமாக இருப்பதோடு, இன்றைய சமூகத்திற்கு தேவையான மிக வித்தியாசமான ஒரு படமாகவும், சர்வதேச பிரச்சனையை கிராமத்து கதையுடன் மிக நேர்த்தியாக சேர்த்து படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சக்திவேல்.
மொத்தத்தில் ஜி குரூப் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபஞ்சன் தயாரிப்பில், ‘ஒன் வே’ அனைவரையும் உறைய வைக்கும் த்ரில்லர் படம்.
Exit mobile version