ஏஸ் சினிமா விமர்சனம் : ஏஸ் சிறந்த நகைச்சுவை கலந்த குடும்ப பொழுதுபோக்கு படம் | ரேட்டிங்: 3.5/5

0
450

ஏஸ் சினிமா விமர்சனம் : ஏஸ் சிறந்த நகைச்சுவை கலந்த குடும்ப பொழுதுபோக்கு படம் | ரேட்டிங்: 3.5/5

நடிகர்கள்: விஜய்சேதுபதி – போல்ட் கண்ணன்
யோகி பாபு – அறிவுக்கரசன்
ருக்மணி வசந்த் – ருக்மணி
பப்லூ பிரித்திவிராஜ் – ராஜதுரை
திவ்யா பிள்ளை – கல்பனா​
பி.எஸ். அவினாஷ் – தர்மா
ராஜ்குமார் – ராஜ்
படக்குழு :
எழுத்து – இயக்கம்: ஆறுமுககுமார்
தயாரிப்பு நிறுவனம் : 7சிஎஸ் என்டெர்டைன்மெண்ட்.
தயாரிப்பாளர்: ஆறுமுககுமார்
ஒளிப்பதிவாளர்: கரண் டீ ராவத்
பாடல்கள்: ஜஸ்டின் பிரபாகர்
பின்னணி இசை – பாடல்கள்: சாம் சிஎஸ்
படத்தொகுப்பு: ஃபென்னி ஆலிவர்
நடனம்: ராஜு சுந்தரம், லீலாவதி
ஸ்டண்ட் (இந்தியா) : தினேஷ் சுப்புராயன், டான் அசோக்
ஸ்டண்ட் (மலேசியா) : ரிக்கி, ஜேம்ஸ் சுங்
கலை: ஏ.கே. முத்து
பாடல் வரிகள்: தாமரை, ரட்டி, வெட்டிபையன் வெங்கட்
தயாரிப்பு நிர்வாகி : எம். கே. சாயிசுந்தர்
மக்கள் தொடர்பு : யுவராஜ்

தனது குற்றப் பின்னணியை மறந்து புதிதாக ஒரு வாழ்க்கை வாழ மலேசியாவுக்கு செல்கிறார் போல்ட் கண்ணன் (விஜய் சேதுபதி). அங்கே, தொழிலதிபராக தன்னைக் காட்டிக் கொள்ளும் அறிவுக்கரசன் (யோகி பாபு) இந்தியாவிலிருந்து தன்னுடைய உறவினரின் நண்பன் போல்ட் கண்ணனை வரவேற்பதற்காக மலேசிய விமான நிலையத்தில் காத்திருக்கிறார். விமான நிலையத்தில் போல்ட் கண்ணன் தான் தன் உறவினர் என்று நினைத்து தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார் அறிவுக்கரசன். மலேசியாவில் கல்பனா (திவ்யா பிள்ளை) நடத்தும் உணவகத்தில் போல்ட் கண்ணன் வேலைக்கு சேர்கிறார். அதே வேலையில் போல்ட் கண்ணன், எதிர் வீட்டில் வசிக்கும் நாயகி ருக்குவுக்கும் (ருக்மணி வசந்த்) போல்ட் கண்ணனுக்கும் காதல் மலர்கிறது. ருக்குவின் வளர்ப்பு தந்தை ராஜதுரை காவல்துறையில் பணியாற்றினாலும் பிரச்சனையில் சிக்கும் பெண்களை மிரட்டியும், சட்ட விரோதமான காரியங்களிலும் ஈடுபடுகிறார். போல்ட் கண்ணன் தன் காதலி ருக்குவின் வேலையை தக்க வைத்துக் கொள்வதற்காக விலை உயர்ந்த உடையை பத்தாயிரம் மலேசிய வெள்ளி கொடுத்து வாங்குவதாக உறுதி அளிக்கிறார். இதற்காக போல்ட் கண்ணனும், அறிவுக்கரசனும் கடன் வாங்குவதற்கு உள்ளூர் கந்துவட்டிக்காரர் கேங்ஸ்டர் தர்மாவை (பி.எஸ்.அவினாஷ்) சந்திக்கிறார்கள். அங்கு கேங்ஸ்டர் தர்மாவின் கொடூரத்தை பார்த்து சூதாட்டம் மூலம் பணம் சம்பாதிக்க முடிவு செய்கிறார் போல்ட் கண்ணன். அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டு நிறைய பணம் ஜெயிக்கும் போது, கேங்ஸ்டர் தர்மா களத்தில் இறங்கி விளையாடுகிறான். தொடர்ந்து ஜெயித்துக் கொண்டிருக்கும் போது கேங்ஸ்டர் தர்மாவின் சூழ்ச்சியால் அதிக பணம் கட்டி விளையாட தர்மாவிடம் பெரிய தொகையை கடனாக பெற்று விளையாடி தர்மாவின் சூழ்ச்சிக்கு அறையாகி தோற்று போய் பெரிய தொகைக்கு கடனாளியாக அவனிடம் சிக்குகிறார். போல்ட் கண்ணன் மற்றும் அறிவுக்கரசன் இருவரும் உயிரோடு இருக்க வேண்டும் என்றால் இந்திய மதிப்பில் 10 கோடி ரூபாயை ஒரு வாரத்திற்குள் கொடுக்க வேண்டும் என கேங்ஸ்டர் தர்மா எச்சரிக்கிறான். இந்தச் சூழலில், ருக்குவுக்கு அவரது வளர்ப்புத் தந்தை ராஜதுரையால் (பப்லு பிருத்விராஜ்) சொத்துப் பிரச்சனை இருப்பது போல்ட் கண்ணனுக்கு தெரியவருகிறது. அதைத் தீர்த்தால் மட்டும் அவரது தொல்லையில் இருந்து விடுபட முடியும் என்ற கட்டாயம் ஏற்படுகிறது. அதே போல அறிவுக்கரசன் தோழி கல்பனாவுக்கும் பண தேவை இருப்பதாக தெரியவருகிறது. இந்த பிரச்சனைகளை சமாளிக்க போல்ட் கண்ணன் மற்றும் அறிவுக்கரசன் இருவரும் பேங்க் கொள்ளையில் ஈடுபட முடிவு செய்து களமிறங்குகிறார்கள். அதன் பின் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

விஜய் சேதுபதியின் சேதுபதி தனது தனித்துவமான அமைதியையும் வெளிப்படையான நுணுக்கத்தையும் போல்ட் கண்ணன் கதாபாத்திரத்திற்கு கொண்டுவருகிறார். தனது பல்துறை திறனையும் திரை இருப்பையும் தனது ஸ்டைலில், காட்சிக்கு காட்சி நுட்பமான மற்றும் அமைதியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

யோகி பாபு படம் முழுக்க விஜய் சேதுபதியுடன் பிரவேசித்து காமெடியில் கலக்கி நீண்ட நாட்களுக்குப்பிறகு பார்வையாளர்களை தனது நகைச்சுவையால் கலகலப்பாக வைத்துள்ளார். விஜய் சேதுபதியும், யோகிபாபுவும் தோன்றும் காட்சிகளில் நல்ல நகைச்சுவை மற்றும் சிலிர்ப்பூட்டும் தருணங்களைக் கொண்டு வருகிறார்கள்.

நாயகியாக ருக்மணி வசந்த், யோகி பாபுவின் தோழியாக திவ்யா பிள்ளை இருவரும் அவர்களது கதாபாத்திரத்திற்கு ஆழத்தை சேர்க்கிறார்கள்.
வில்லத்தனத்தில் பி.எஸ்.அவினாசும், பப்லு பிரித்விராஜ் இருவரும் போட்டி போட்டு மிரட்டியுள்ளனர்.கரண் பி. ராவத்தின் ஒளிப்பதிவு மலேசியாவின் துடிப்பான இடங்களைப் சிறப்பான காட்சி கோணங்களுடன் படம்பிடித்து, கதைக்கு ஒரு காட்சி ஈர்ப்பை சேர்க்கிறது.

படத்தொகுப்பாளர் ஃபென்னி ஆலிவரின் எடிட்டிங் விறுவிறுப்பை கூட்டுகிறது. குறிப்பாக போக்கர் விளையாட்டைக் காட்சியில் கச்சிதமான பணியைச் செய்திருக்கிறார்.பாடல்களுக்கு ஜஸ்டின் பிரபாகர் மற்றும் சாம் சி எஸ் மனதை தொடும் இசை வழங்கி உள்ளனர். சி எஸ் தனது பின்னணி இசையால் காட்சிகளை உயர்த்தியுள்ளார்.

வழக்கமான பழைய பழக்கமான கதை தான் என்றாலும் மலேசியாவைப் பின்னணியாகக் கொண்டு, திரைக்கதையில் வங்கி கொள்ளை, போலீஸ் குழு துரத்தல், காதல், ஆக்ஷன், ஒரு ஜாக்பாட் லாட்டரி, போக்கர் விளையாட்டு உள்ளடக்கிய அனைத்திற்கும் இடையில், பார்வையாளர்களை மகிழ்விக்க சிறந்த நகைச்சுவை காட்சிகளை அமைத்து இயக்கி உள்ளார் ஆறுமுக குமார்.

மொத்தத்தில் 7 சி எஸ் என்டெர்டைன்மெண்ட் சார்பில் ஆறுமுககுமார்
தயாரித்திருக்கும் ஏஸ் சிறந்த நகைச்சுவை கலந்த குடும்ப பொழுதுபோக்கு படம்.