Site icon Chennai City News

இன்பினிடி விமர்சனம் : இன்பினிடி த்ரில்லர் கதையை விரும்பும் பார்வையாளர்களுக்கு ஏமாற்றமே மிச்சம். | ரேட்டிங் : 2/5

இன்பினிடி விமர்சனம் : இன்பினிடி த்ரில்லர் கதையை விரும்பும் பார்வையாளர்களுக்கு ஏமாற்றமே மிச்சம். | ரேட்டிங் : 2/5

இன்பினிடி விமர்சனம்

மென்பனி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சாய் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இன்ஃபினிட்டி’. இந்த படத்தில் நட்டி நட்ராஜ், வித்யா பிரதீப், முனீஷ்காந்த், சார்லஸ் வினோத், வினோத் சாகர், ஜீவா ரவி என பலரும் நடித்துள்ளனர். சரவணன் ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில் பாலசுப்ரமணியம் இசையமைத்துள்ளார்.  மென்பனி புரொடக்ஷன்ஸ் வி.மணிகண்டன், யு.பிரபு,கே.அற்புதராஜன், டி. பாலபாஸ்கரன் ஆகியோர் தயாரித்திதுள்ளனர்.

இளம்பெண், காவல் அதிகாரி, எழுத்தாளர், மது போதை ஆசாமி என்று நான்கு கொலைகள் தொடர்ச்சியாக நடக்கிறது. போலீஸ் விசாரிக்கும் போதே காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டதால் சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுகிறது. போலீஸ் நிலையத்தில் ஒரு இளம் பெண் காணவில்லை என்று பெற்றோர் புகார் கொடுக்க, அவர்களும் மறுநாள் காணாமல் போகின்றனர். இதனிடையே கொலை வழக்குகளை சிபிஐ அதிகாரியான எவ்வி இளவளவன்(நட்டி நட்ராஜ்) விசாரிக்கிறார். இந்த வழக்கின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை அரசு மருத்துவர் டாக்டர் நந்தினி (வித்யா பிரதீப்) வழங்குகிறார். இவரும் சிபிஐ அதிகாரி எவ்விக்கு இந்த வழக்கில் உதவி செய்கிறார். இடையில் எவ்வி இளவளவனையும், டாக்டர் நந்தினியையும் கொல்ல முயற்சிகள் நடக்கிறது. இந்த கொலைகளை தீவிரமாக எவ்வி இளவளவன் விசாரிக்கும் போது திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றன. இன்னொரு புறம் அரசு டாக்டரான வித்யா பிரதீப் சிகிச்சை அளிக்கும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் பல குழந்தைகள் மர்மமான முறையில் இறக்கிறார்கள். இதனால் அவரையும் கண்காணிக்க ஆரம்பிக்கிறார் நட்ராஜ்.  உண்மையான கொலையாளி யார்? எதற்காக இத்தனைக் கொலை நடந்தது? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

சி.பி.ஐ. அதிகாரி எவ்வி இளவளவனாக வேடத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார் நட்ராஜ். உணர்ச்சிகள் நிரம்பிய வசனங்களுடன் அசத்தலாக செய்து என அனைத்தும் கதாபாத்திரத்திற்கு பெருமை சேர்க்கிறது.

டாக்டராக வரும் வித்யா பிரதீப் அளவான நடிப்பாலும் சாஃப்ட் ஆக வந்து வில்லியாக மாறும் போது இன்னும் மிரட்டியிருக்கலாம்.

காவலராக வரும் முனீஸ்காந்த், நட்ராஜின் நண்பராக வரும் முருகானந்தம், இளம்பெண்ணின் அப்பாவாக வரும் ஜீவா ரவி, அம்மாவாக வரும் மோனா பேடர், நிகிதா, ஆதவன், சிந்துஜா என அத்தனை கதாபாத்திரங்களும் தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

பாலசுப்பிரமணியன் இசை பின்னணி இசையும், சரவணன் ஸ்ரீ ஒளிப்பதிவும் சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதைக்கு முடிந்தவரை நியாயம் செய்துள்ளனர்.

இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் கதைகளில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை ஒரு எட்ஜ்-ஆஃப்-தி-சீட் த்ரில்லராக திரைக்கதை அமைய வேண்டும். ஆனால் ‘இன்ஃபினிட்டி’யை அவ்வாறு படைக்க தவறி விட்டார் இயக்குநர் சாய் கார்த்திக்.
அத்துடன் இறுதியில்இ இயக்குனர் இரண்டாம் பாகத்திற்கு ஒரு லீடையும் கொடுக்கிறார். இரண்டாம் பாகத்திலாவது விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து முதல் பாகத்தில் செய்த பிழையை சரிசெய்வார் என நம்புவோம்.

மொத்தத்தில் மென்பனி புரொடக்ஷன்ஸ் வி.மணிகண்டன், யு.பிரபு, கே.அற்புதராஜன், டி. பாலபாஸ்கரன் ஆகியோர் தயாரித்திருக்கும் இன்பினிடி த்ரில்லர் கதையை விரும்பும் பார்வையாளர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்.

Exit mobile version