ஆற்றல் விமர்சனம் : ஆற்றல் வலிமை குறைவு | ரேட்டிங்: 2/5
விதார்த், ஷிரிதா ராவ், சார்லி, ரமா, வம்சி கிருஷ்ணா, விக்கி, வித்யூ ராமன் ஆகியோர் நடித்திருக்கும் ஆற்றல் படத்தை செவ்வந்தி மூவிஸ் ஜே.மைக்கேல் தயாரிக்க, கே.எல். கண்ணன் இயக்கியிருக்கிறார்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை-அஸ்வின் ஹேமந்த், எடிட்டர்-விஜய் வேலுக்குட்டி, கலை-வீர சமர், ஒளிப்பதிவு-கொளஞ்சி குமார், சண்டை-விக்கி, பாடல்கள்-விவேகா,ராம்கணேஷ், மக்கள் தொடர்பு- குணா.
விதார்த் புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வமுள்ள மெக்கானிக்கல் இன்ஜினியர், ஆள் இல்லாமல் ஓடும் காரை கண்டுபிடிக்க பத்து லட்சம் பணம் தேவைப்படுகிறது. அதே நேரத்தில் பணம் வைத்திருப்பவர்களின் தகவல்களை ரகசியமாக சேகரிக்கும் மர்ம கும்பல், சென்னையில் பல இடங்களில் தங்களது கைவரிசையை காட்டி அவர்களை கொலை செய்து அவர்களிடம் இருக்கும் பணத்தையும், நகைகளையும் கொள்ளையடிக்கிறது. இந்நிலையில், கார் மெக்கானிக் கடை வைத்திருக்கும் தந்தை சார்லி தன் மகனின் ஆசையை நிறைவேற்ற பத்து லட்சம் கடன் வாங்கி பைக்கில் எடுத்து வரும் வழியில் அடிபட்டு இறக்கிறார். பத்து லட்சம் பணமும் காணாமல் போகிறது. அதே சமயம் ஹெல்மெட் அணிந்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் வரும் நால்வர் பல வீடுகளில் புகுந்து கொள்ளை, கொலை என்று படுபாதக செயலை செய்கின்றனர். இதற்கு தலைவனாக வம்சி இருக்கிறார். சார்லிக்கு கடன் கொடுத்தவர் விதார்த்திடம் தந்தையின் கடனை சொல்ல, அதிர்ச்சியாகும் விதார்த்; தன் தந்தையும் பணத்திற்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுகிறார். இதனை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் விதார்த். இறுதியில் தன் தந்தையின் கொலை காரணமானவர்களை கண்டுபிடித்தாரா? பணத்தை எடுத்த உண்மையான குற்றவாளி கண்டுபிடித்து பணத்தை மீட்டாரா என்பதுதான் கிளைமாக்ஸ்.
