ஆரகன் சினிமா விமர்சனம் : ஆரகன் மந்திர தந்திர வலையில் சிக்குண்ட மான் | ரேட்டிங்: 2.5/5

0
286

ஆரகன் சினிமா விமர்சனம் : ஆரகன் மந்திர தந்திர வலையில் சிக்குண்ட மான் | ரேட்டிங்: 2.5/5

ட்ரென்டிங் ஆர்ட்ஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் ஹரிஹரன் பஞ்சலிங்கம் தயாரித்திருக்கும் ஆரகன் படத்தில் மைக்கேல் தங்கதுரை, கவிபிரியா மனோகரன், ஸ்ரீ ரஞ்சனி, கலைராணி, ப்ரீத்தம் சக்கரவர்த்தி, கிருஷ்ணன், யாசர், ஆதித்யா கோபி, கௌரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அருண் கே ஆர். இசை-விவேக்- ஜெஸ்வந்த், எடிட்டிங்-சசி தக்ஷா, இணை தயாரிப்பு-கிரிஷாந்தி ஹரிஹரன், வரகுணம் பஞ்சலிங்கம், மதுரதன் பஞ்சலிங்கம், பிஆர்ஒ-ஜான்

ஆரம்ப காட்சியில் ஒவியத்துடன் வரலாற்று கதை பின்னணியில்; தொடங்க வனப்பகுதியில் தஞ்சமடையும் இளவரசர் இளந்திரையன் முனிவர் ஒருவரை பாம்பு தீண்டவதிலிருந்து காப்பாற்றுகிறார். முனிவர் இளந்திரையனின் ஆசைப்படி என்றும் இளமையாக இருக்க யவனகாந்தை வேர் ஒன்றை கொடுத்து மாய தந்திரங்களை சொல்லிக் கொடுத்து அதன்படி பின்பற்றச் சொல்கிறார். அதன் பின் கதைக்களம் இன்றைய காலகட்டத்திற்கு மாறுகிறது. சென்னையில் மகளிர் விடுதியில் தங்கி வேலைக்கு செல்லும் அனாதையான கவிபிரியா மைக்கேல் தங்கதுரையை காதலிக்கிறார். முதலில் 4 லட்சம் பணத்தை பிசினசிற்காக சம்பாதித்து விட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்று மைக்கேல் சொல்கிறார். அதனால் கவிபிரியா பணத்தேவைக்காக மலைபிரதேசத்தில் தனியாக வசிக்கும் வயதான பெண்மணி ஸ்ரீரஞ்சனியை பார்த்துக் கொள்ளும் பொறுப்பான ஆறுமாத வேலையில் சேர்கிறார். முதலில் ரம்யமான சூழ்நிலை, தனிமை ஆகியவற்றை ரசிக்கும் கவிபிரியா நாளடைவில் கனவில் அங்கே அமானுஷ்ய சக்தி பயமுறுத்தல் இருப்பது போன்று உணர்கிறார். இதனால் தூக்கம் கெட்டு மனதளவில் சோர்வாக இருக்க, அந்த இடத்திலிருந்து வெளியேற நினைக்கிறார். இறுதியில் கவிபிரியாவால் மலைப்பிரதேசத்தில் நடக்கும் அமானுஷ்யம்  என்ன என்று கண்டுபிடித்து முடிந்ததா? மைக்கேல் கவிபரியாவை காப்பாற்ற வந்தாரா? கவிபிரியாவிற்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

மைக்கேல் தங்கதுரை, கவிபிரியா மனோகரன், ஸ்ரீ ரஞ்சனி ஆகிய மூன்று பேரை சுற்றித்தான் கதைக்களம் நகர்கிறது. இவர்களின் பங்களிப்பு படத்திற்கு பெரும் பலம் மற்றும் கலைராணி, ப்ரீத்தம் சக்கரவர்த்தி, கிருஷ்ணன், யாசர், ஆதித்யா கோபி, கௌரி ஆகியோர் படத்தில் சில காட்சிகள் வந்து விட்டு போகிறார்கள்.

விவேக்- ஜெஸ்வந்த் இசை ரசிக்க வைக்கிறது. இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் எடிட்டர் சசி தக்ஷா.

என்றும் இளமையாக வாழ நினைக்கும் இளைஞன் அதற்காக மாய தந்திரங்களை கற்று பலவீனமான பெண்களை வசியம் செய்து அவர்களின் இளமையை அபகரிக்கும் வித்தையை கையாண்டு தன்னுடையதாக்க எடுக்கும் முயற்சிகள் அமானுஷ்ய நிகழ்வுகளுடன் த்ரில்லிங் கலந்து சுவாரஸ்யமாக கொடுக்க முயற்சி செய்திருக்கும் இயக்குனர் அருண் கே ஆர் குழப்பமில்லாமல் காட்சிகளை விவரித்து சொல்லியிருந்தால் பேசப்பட்டிருக்கும்.

மொத்தத்தில் ட்ரென்டிங் ஆர்ட்ஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் ஹரிஹரன் பஞ்சலிங்கம் தயாரித்திருக்கும் ஆரகன் மந்திர தந்திர வலையில் சிக்குண்ட மான்.