ஆயிரம் பொற்காசுகள் சினிமா விமர்சனம் : ஆயிரம் பொற்காசுகள் ஆரம்பம் முதல் இறுதி காட்சி வரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் | ரேட்டிங்: 3.5/5
ஈரமான ரோஜாவே, அலெக்சாண்டர் உட்பட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் கேயார். தயாரிப்பாளராகவும், வினியோகஸ்தராகவும் அனுபவம் கொண்ட கேயார் தனது கேஆர் இன்போடெயின்மெண்ட் சார்பில் அடுத்து வெளியிடும் படம் ஆயிரம் பொற்காசுகள்.
விதார்த், சரவணன், அருந்ததி நாயர், வெற்றிவேல் ராஜா, ஹலோ கந்தசாமி, ஜார்ஜ் மரியான், பாரதி கண்ணன், வெர்டிகல் ராஜா, செம்மலர் அன்னம், பவுன்ராஜ், ஜிந்தா, கர்ண ராஜா, ஜிந்தா கோபி , ரிந்து ரவி, தமிழ் செல்வி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப வல்லுநர்கள்
தயாரிப்பாளர் – ராமலிங்கம்
தயாரிப்பாளர் – ராமலிங்கம்
எழுத்து மற்றும் இயக்கம் – ரவி முருகையா
ஒளிப்பதிவு – பானு முருகன்
இசை – ஜோஹன் சிவனேஷ்
எடிட்டிங் – ராம் மற்றும் சதீஷ்
கலை – சண்முகம்
ஸ்டண்ட் – ஃபையர் கார்த்திக்
நடனம் – அசோக் ராஜா
ஒலி EFX – சதீஷ்
ஒப்பனை – மணி
பாடல்கள் – கபிலன், நந்தலாலா, தனிக்கொடி, முத்துவேல், ரவி முருகையா
தயாரிப்பு மேலாளர் – லோகநாதன்
டைரக்ஷன் டீம் – கே பிரபாகரன், நாகேந்திரன் வேலுசாமி, சுரேஷ் செல்லையா, வி.கே.குமார்
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.
ஒளிப்பதிவு – பானு முருகன்
இசை – ஜோஹன் சிவனேஷ்
எடிட்டிங் – ராம் மற்றும் சதீஷ்
கலை – சண்முகம்
ஸ்டண்ட் – ஃபையர் கார்த்திக்
நடனம் – அசோக் ராஜா
ஒலி EFX – சதீஷ்
ஒப்பனை – மணி
பாடல்கள் – கபிலன், நந்தலாலா, தனிக்கொடி, முத்துவேல், ரவி முருகையா
தயாரிப்பு மேலாளர் – லோகநாதன்
டைரக்ஷன் டீம் – கே பிரபாகரன், நாகேந்திரன் வேலுசாமி, சுரேஷ் செல்லையா, வி.கே.குமார்
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.

நாயகன் தமிழ் நாதனாக விதார்த், தாய்மாமன் ஆனைமுத்து வாக சரவணன், காதலி பூங்கோதை (அருந்ததி நாயர்) எதிர் வீட்டு கோவிந்தன் (ஹலோ கந்தசாமி), அரிச்சந்திரன் (ஜார்ஜ் மரியான்) போலீஸ் அதிகாரி முத்து பாண்டியன் (பாரதி கண்ணன்), பொன்ராம் (வெர்டிகல் ராஜா), ஆண்டவன் (பவன் ராஜ்), பிடாரன் (ஜிந்தா), ஊர் தலைவர் (கர்ண ராஜா), அறிவழகன் (ஜிந்தா கோபி), ஆராயி (செம்மலர் அன்னம்), தமிழ் நாதனின் அம்மா செந்தாமரை (ரிந்து ரவி), பூங்கோதையின் அம்மா சரசு (தமிழ் செல்வி) ஆகியோர் தங்கள் ஏற்ற கதாபாத்திரத்தின் மூலம் கிராமத்து மக்களின் பசுமையான வாழ்வியலையும், அன்றாட நிகழ்வுகளையும் கண் முன் நிறுத்தி தொடர் நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லாமல் பார்த்துக் கொள்கின்றனர் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் சிறப்பான நடிப்பு பாராட்டத்தக்கது. குறிப்பாக சரவணன், ஜார்ஜ் மரியான் மற்றும் ஹலோ கந்தசாமி ஆகிய அவர்கள் மூவரின் உடல் மொழியும், நகைச்சுவையும் படத்தை வேற லெவலுக்கு எடுத்துச் சென்றுள்ளது.
மொத்தத்தில் ஆயிரம் பொற்காசுகள் ஆரம்பம் முதல் இறுதி காட்சி வரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.