ஆகக்கடவன சினிமா விமர்சனம் : ஆகக்கடவன இதுவரை சொல்லப்படாத சஸ்பென்ஸ் த்ரில்லர் – ஒரு புதிய முயற்சி | ரேட்டிங்: 3/5
முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே நடிக்கும் திரைப்படம் ஆகக்கடவன.
நடிகர்கள் : ஆதிரன் சுரேஷ், வின்சென்ட், சி ஆர் ராகுல், மைக்கேல், ராஜசிவன், சதீஷ் ராமதாஸ், தட்சணா மற்றும் விஜய் நிவாஸ்
படக்குழுவினர் :
இசை : சாந்தன் அன்பழகன்
ஒளிப்பதிவு : லியோ வி ராஜ்
படத்தொகுப்பு : சுமித் பாண்டியன் மற்றும் பூமேஷ் தாஸ்
பாடல்கள் : விக்கி
சண்டைபயிற்சி : தேசாய்
கலை இயக்குனர் : விஜயவீரன்
ஒளிக்கலவை : வினோத்குமார்
ஒலி வடிவமைப்பு : சதிஷ்குமார்.
ஒலிக்கலவை : ராஜா நல்லைய்யா
தயாரிப்பு நிறுவனம் : சாரா கலைக்கூடம்
தயாரிப்பு : அனிதா லியோ – லியோ ஏ.ராஜா
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : தர்மா.
மக்கள் தொடர்பு : எம்.பி.ஆனந்த்
6 முக்கிய கதாபாத்திரங்களை பற்றி அறிமுகப்படுத்துவதுடன், கடத்தல், கொள்ளை, கொலை போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் வின்சென்ட்.எஸ், சதீஷ் ராமதாஸ், மைக்கேல்.எஸ் ஆகியோர் ஒரு இளைஞனை காரில் கடத்துவதுடன் படம் தொடங்குகிறது. மூன்று நண்பர்கள் ஆதிரன் சுரேஷ், சி.ஆர்.ராகுல், ராஜசிவன் ஒரு மெடிக்கல் ஷாப் ஒன்றில் ஒன்றாக வேலை செய்து வருகிறார்கள். அந்தக் கடையின் உரிமையாளர் தனது மகளின்; திருமணத்திற்கு பணம் தேவைப்படுவதால் மெடிக்கல் ஷாப்பை விற்க முடிவெடுக்க, அதை அவர்கள் வாங்கிக் கொள்ள முடிவு செய்கிறார்கள். அதற்காக ரூ. ரூ.6 லட்சம் கேட்கிறார். மூன்று நண்பர்களும் எப்படியோ இந்த மெடிக்கல் ஷாப்பை வாங்க பணத்தை தயார் செய்கிறார்கள். ஆனால், இந்த பணம் திருடப்படுகிறது. இந்த நிலையில், ஊருக்குச் சென்று சொத்தை விற்று பணத்தை தயார் செய்ய முடிவெடுக்கிறார் ஆதிரன் சுரேஷ். அவருடன் பைக்கில் துணையாகச் செல்கிறார் சி.ஆர்.ராகுல். பயணத்தின் போது அவர்களது பைக் பஞ்சராகிறது. பஞ்சர் போட காட்டுப் பகுதியில் இருக்கும் பஞ்சர் கடைக்கு செல்கிறார்கள். அங்கே, ஆரம்பத்தில் ஒரு இளைஞனை காரில் கடத்திய வின்சென்ட்.எஸ், சதீஷ் ராமதாஸ், மைக்கேல்.எஸ் ஆகியோர் அங்கு இருக்கிறார்கள். சிறுவன் ஒருவன் பஞ்சர் போடும் வேலையை செய்து கொண்டு இருக்கிறான். பஞ்சர் போட வந்தவர்க்கும் இந்த கடத்தல் கும்பலுக்கும் பிரச்னை ஏற்படுகிறது. நண்பர்கள் இருவரும் தொடர்ச்சியாக பிரச்னையில் அவர்கள் அறியாமல் ஆபத்தான சூழலில் சிக்கிக் கொள்கிறார்கள். வெறும் தற்செயல் நிகழ்வுகள் என்று தோன்றுவது உண்மையில் தங்களை சிக்க வைக்க திட்டமிடப்பட்ட திட்டங்கள் என்பதை அவர்கள் விரைவில் உணரத் தொடங்குகிறார்கள். மேலும் அங்கே மர்மமான, திகில் சம்பவங்கள் நடைபெறுகிறது. இந்நிலையில் மற்றும் ஒரு நண்பன் ராஜசிவனும் அங்கு வந்து இந்த கும்பலிடம் மாட்டிக்கொள்கிறார். அதன்பிறகு நண்பர்கள் மூவருக்கும், கடத்தல் கும்பலுக்கும் என்ன நடக்கிறது என்பதே ‘ஆகக்கடவன’ படத்தின் மீதிக்கதை.
நண்பர்கள் ஆதிரன் சுரேஷ், சி.ஆர். ராகுல், ராஜசிவன் மற்றும் வில்லன்களான வின்சென்ட்.எஸ், சதீஷ் ராமதாஸ், மைக்கேல்.எஸ், பஞ்சர் கடை சிறுவன் தக்ஷன் ஆகியோர் தங்கள் பாத்திரங்களை அறிந்து சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர் மற்றும் ஒரு பரபரப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைக்கதையுடன் பார்வையாளர்களை ஒன்றாக இணைத்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் லியோ வெ ராஜா. நெடுஞ்சாலைகளிலும், காடுகளிலும், முள்ளுக் காடுகளிலும், பாக்கு தோப்பிலும் பயணிக்கும் அவரது கேமரா கோணங்கள் கதையின் ஓட்டத்திற்கு வலு சேர்த்துள்ளது.
இசையமைப்பாளர் சாந்தன் அன்பழகன் இசை மற்றும் பின்னணி இசையும் பல பதட்டமான காட்சிகளை மேம்படுத்துகிறது.
படத்தொகுப்பை சுமித் பாண்டியன் மற்றும் புமேஷ் தாஸ் இணைந்து திரைக்கதைக்கு விறுவிறுப்பை கூட்டியுள்ளனர்.
முழுக்க முழுக்க ஆண்களை மட்டுமே மையமாகக் கொண்டு, நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் வலிமை உண்டு என்பதை உணர்த்தும் வகையில் கதையை ஒரு புதிய கோணத்தில், சுவாரஸ்யமான உச்சக்கட்ட திருப்பத்துடன் திரைக்கதை அமைத்து காட்சிபடுத்தி இருக்கிறார் அறிமுக இயக்குநர் தர்மா.
மொத்தத்தில் சாரா கலைக்கூடம் சார்பில் அனிதா லியோ – லியோ ஏ.ராஜா இணைந்து தயாரித்திருக்கும் ஆகக்கடவன இதுவரை சொல்லப்படாத சஸ்பென்ஸ் த்ரில்லர் – ஒரு புதிய முயற்சி.