அந்த நாள் விமர்சனம் : அந்த நாள் – மிஸ்ட்ரி த்ரில்லர் | ரேட்டிங்: 3/5

0
316

அந்த நாள் விமர்சனம் : அந்த நாள் – மிஸ்ட்ரி த்ரில்லர் | ரேட்டிங்: 3/5

கிரீன் மேஜிக் என்டர்டெயின்மென்ட் சார்பில் ஆர். ரகுநந்தன் தயாரித்திருக்கும் அந்த நாள் படத்தின் கதை, திரைக்கதையை ஆர்யன் ஷியாமுடன் எழுதி இயக்கியிருக்கிறார் விவி கதிரேசன்.

இதில் ஆர்யன் ஷ்யாம், ஆத்யா பிரசாத், லீமா பாபு, ராஜ்குமார், கிஷோர் ராஜ்குமார், இமான் அண்ணாச்சி ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- நிர்வாக தயாரிப்பாளர்: ஆர்.ஸ்ரீகாந்த், இசை – என்.எஸ்.ராபர்ட் சற்குணம், ஒளிப்பதிவாளர் – சதீஷ் கதிர்வேல், எடிட்டர் – ஜே.எஃப் காஸ்ட்ரோ, தலைமை தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: பி. ஜெய் கணேஷ், கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – ஹரிபிரசாத் ராஜகோபால், மக்கள் தொடர்பு- பெரு துளசி பழனிவேல்.ஸ்ரீ (ஆர்யன் ஷ்யாம்) என்ற திரைப்பட இயக்குனர், கதை விவாதங்களுக்காக அவரது உதவியாளர்கள் (ஆத்யா, லீமா மற்றும் ராஜ்குமார்) மற்றும் சமையல்காரர் கந்தாவுடன் (இமான் அண்ணாச்சி) ஈசிஆர் – ல் உள்ள பஞ்சமி பங்களாவில் கதை விவாதத்திற்கு செல்கிறார்கள். கதை விவாதத்தின்போது ஓஜோ போர்டு வைத்து விளையாடும் விளையாட்டை விளையாடுகின்றனர். அப்போது, அதில் ஒரு அமானுஷ்யத்தோடு உரையாடுகின்றனர். இந்த விளையாட்டை பாதியில் நிறுத்தி விடுகின்றனர். இரவில் அனைவரும் தூங்கும் போது, வீட்டில் அமானுஷ்யம் அனைவரையும் பயமுறுத்துகிறது. அப்போது அமானுஷ்யம் சொல்ல வந்ததை தெரிந்து கொள்ள முயலும் போது அங்கு, ஒரே இடத்தில் தங்கள் அழிவை சந்தித்த எட்டு பேர் கொண்ட குடும்பத்தின் குழப்பமான காட்சிகளைக் கொண்ட கேமராவில் கண்டறியும் போது இருண்ட திருப்பத்தை எடுக்கிறது. முகமூடி அணிந்த கொலையாளிகள் நிழலில் இருந்து வெளிவரும் போது அவர்களின் இரவு பயங்கரமாக சுழல்கிறது, சூனியத்தின் தொடர்புடைய விளையாட்டில் அவர்களை சிக்க வைக்கிறது. யார் அந்த முகமூடி மனிதர்கள்? அவர்களின் குறிக்கோள் என்ன? பஞ்சமி பங்களாவில் உள்ள மர்மம் என்ன? போன்ற கேள்விகளுக்கு திகில் கலந்த திருப்பங்களுடன் மீதிக்கதை பதில் செல்கிறது.

ஆர்யன் ஷ்யாம் இரட்டை பரிமாணம் நிறைந்த வேடத்தில் ஸ்ரீயாக திகில் கலந்த முகபாவனையை சிறப்பாக கையாண்டு நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கோலிவுட்டில் இவருக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு. மேலும் கதை, திரைக்கதை அமைத்து படத்தை தயாரித்திருக்கிறார்.

ஆத்யா பிரசாத், லீமா பாபு, ராஜ்குமார், கிஷோர் ராஜ்குமார், உட்பட அனைத்து நடிகர்கள் தங்களுடைய நிலையான-பிரச்சினையான திகில் கதாபாத்திரங்களின் மூலம் தங்களால் இயன்றதைச் சிறப்பாக வழங்கி இருக்கிறார்கள்.

சமையல்காரர் கந்தாவாக இமான் அண்ணாச்சி அவ்வப்போது பார்வையாளர்களை கலகலப்பாக வைக்கிறார்.

இசை என்.எஸ்.ராபர்ட் சற்குணம், ஒளிப்பதிவு சதீஷ் கதிர்வேல், படத்தொகுப்பு ஜே.எஃப் காஸ்ட்ரோ ஆகியோரின் தொழில்நுட்ப அம்சங்கள் போதுமான திறன் கொண்டவை – ஒரு வித்தியாசமான பிளாக் மேஜிக் கோணத்தை உணர வைக்கிறது.

மனித நரபலி என்ற சர்ச்சைக்குரிய கதையை திகில் கலந்த திரைக்கதையில் சுவாரஸ்யத்தை கூட்டி யாரும் எதிர்பாராத திருப்பங்களுடன் கிளைமாக்ஸ் அமைத்து பார்வையாளர்களை அச்சுறுத்தும் வகையில் இயக்கி உள்ளார் விவி கதிரேசன்.

மொத்தத்தில் கிரீன் மேஜிக் என்டர்டெயின்மென்ட் சார்பில் ஆர். ரகுநந்தன் தயாரித்திருக்கும் அந்த நாள் – மிஸ்ட்ரி த்ரில்லர்.