ஜோரா கைய தட்டுங்க சினிமா விமர்சனம் : ஜோரா கைய தட்டுங்க – ஏமாற்றமே மிச்சம்  | ரேட்டிங்: 2/5

0
258

ஜோரா கைய தட்டுங்க சினிமா விமர்சனம் : ஜோரா கைய தட்டுங்க – ஏமாற்றமே மிச்சம்  | ரேட்டிங்: 2/5

வாமா என்டர்டைன்மென்ட் சார்பில் ஜாகிர் அலி தயாரித்து, கதை திரைக்கதை வசனத்தை வினீஷ் மில்லினியம் மற்றும் கே. பிரகாஷ் இணைந்து எழுதி,  வினீஷ் மில்லெனியம் இயக்கி இருக்கும் படம் ஜோரா கைய தட்டுங்க.

நடிகர்கள்:  யோகி பாபு, சாந்தி ராவ், ஹரீஷ் பேரடி, கல்கி, வசந்தி, மணிமாறன், ஜாகிர் அலி, அருவி பாலா, ஸ்ரீதர் கோவிந்தராஜ், மூர், மேனகா, வரிஜாகஷன், நைரா நிஹார்.

தொழில்நுட்ப குழுவினர் :
கோ பேனர்-ஸ்ரீ சரவணா பிலிம் ஆர்ட்ஸ், கோ தயாரிப்பாளர்-ஜி சரவணா
இசை – எஸ்.என் அருணகிரி
பின்னணி இசை – ஜித்தின் கே ரோஷன்,
ஒளிப்பதிவாளர் – மது அம்பாட் ஐளுஊ
எடிட்டர் – சாபு ஜோசப்
பாடல் வரிகள் – மணி அமுதவன்
ஸ்டண்ட் – மிரட்டல் செல்வா
நடனம் – விஜய் சிவசங்கர்
வாடிக்கையாளர் – ராதாகிருஷ்ணன்
கலை : எஸ் அய்யப்பன்
இணை இயக்குனர் – ஸ்ரீனிவாஸ்
னுஐ – துபுநந ளுவரனழை
ஏகுஓ – நமஹா கிராபிக்ஸ்
வண்ணம் – ரகு ராம்
ஸ்டில்ஸ் – மணிவண்ணன்
மக்கள் தொடர்பு – சதீஷ் குமார் (எஸ்2 மீடியா)

தென்னிந்தியாவின் கிராமப்புற மலைப்பிரதேசத்தில் தனிமையில் இருக்கும் ஒரு மேஜிக் நிபுணர் யோகி பாபு, கொழுந்து விட்டு எரியும் நெருப்பில் இருந்து வெளியே வரும் வித்தையில்  ஒரு பெரிய ரிஸ்கான மேஜிக் செய்யும் போது தீக்காயங்களுடன் வெளியேறும் அப்பா இறந்து போகிறார். தனது தந்தையிடம் இருந்து சின்னச் சின்ன மேஜிக் கற்றுக் கொண்டு மேஜிக் மேனாக வாய்ப்பு தேடி வலம் வந்து காட்டுப் பகுதியில் உள்ள ஒரு பழைய வீட்டில் வசித்து வருகிறார். அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் மூன்று இளைஞர்கள் குடித்து கஞ்சா போதையில் யோகி பாபுவை கேலியும் கிண்டலும் செய்து வருகிறார்கள். கிடைத்த ஒரு வாய்ப்பில் மேஜிக் செய்யும் போது சரியாக செயல்படாததால்  ஒரு குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டு போலீஸ் ஸ்டேஷன் சென்று அடி வாங்கி வருகிறார். இந்நிலையில், அவருக்கு வீடு தேடிவரும் சாந்தி ராவ் அறிமுகம் கிடைக்கிறது. இங்கு வரும் சாந்தி ராவ்வை இந்த மூன்று இளைஞர்கள் போதையில் கலாட்டா செய்து, தட்டிக் கேட்ட யோகி பாபுவை கிண்டல் செய்கிறார்கள். மேலும் அவர்கள் யோகி பாபுவின் புறாவை திருடி கொன்று சாப்பிடுகிறார்கள். கோபப்பட்ட யோகி பாபு அவர்களில் ஒருவரின் சட்டையை பிடித்து எச்சரிக்கிறார். ஆத்திரத்தில் அவர்கள் ரவுடியை ஏவி மேஜிக் மேன் யோகி பாபுவின் கையை வெட்டி விடுகின்றனர். பலமாக வெட்டுப்பட்ட கையை வைத்து இனி சரியாக மேஜிக் ஷோ நடத்த முடியாது என்று டாக்டர் எச்சரிக்கிறார்.இந்த நிலையில் அதே ஊரில் வசிக்கும் ஒரு ஏழை சிறுமியை இந்த மூன்று பேரில் ஒருவன் ரவுடிகளோடு சேர்ந்து கடத்தி கற்பழித்துக் கொன்று விடுகிறார்கள். கொலை செய்யப்பட்ட இந்த சிறுமி யோகி பாபுவுக்கு நன்கு அறிமுகமானவள். ஆந்த கொலைகாரர்களை தனது மேஜிக் திறமையை பயன்படுத்தி எப்படி பழி வாங்குகிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.

யோகி பாபு எப்படி இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்தார் என்று தெரிய வில்லை. ஒரு பழிவாங்கும் கதை களத்தில் அவரது நடிப்பு திறன் பெரிய அளவில் எடுபட வில்லை. இயக்குனர் என்ன சொன்னாரோ அதை அப்படியே துளியும் அவரது பங்களிப்பு இல்லாமல் செய்தது போல் தோன்றுகிறது.

சாந்தி ராவ், ஹரீஷ் பேரடி, கல்கி, வசந்தி, மணிமாறன், ஜாகிர் அலி, அருவி பாலா, ஸ்ரீதர் கோவிந்தராஜ், மூர், மேனகா, வரிஜாகஷன், நைரா நிஹார் உள்ளிட்ட துணை கதாபாத்திரங்களின் பங்களிப்பு ஒரு மந்தமான திரைக்கதையால் வீணடிக்கப்பட்ட உள்ளது.

ஒளிப்பதிவாளர்  மது அம்பாட்  , இசையமைப்பாளர் எஸ்.என். அருணகிரி, பின்னணி இசையமைப்பாளர் ஜித்தின் கே ரோஷன், எடிட்டர் சாபு ஜோசப், கலை இயக்குநர் எஸ். அய்யப்பன், ஸ்டண்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வா ஆகியோர் தொழில்நுட்ப ரீதியாக அழுத்தமில்லாத திரைக்கதையை முடிந்தவரை நகர்த்த கடுமையாக உழைத்துள்ளனர்.

மேஜிக்கை மையப்படுத்தும் கதையில் க்ரைம், மேஜிக், பழி வாங்குதல் என திரைக்கதை அமைக்கும் போது படம் முழுக்க குழந்தைகளை மனதில் வைத்து மேஜிக் சம்பந்தப்பட்ட காட்சிகளுடன் நகைசுவையும் அதிகம் இடம்பெற செய்து திரைக்கதை அமைப்பது அவசியம். ஆனால் ஜோரா கைய தட்டுங்க டைட்டிலுக்கும் இந்த கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இயக்குனர் வினேஷ் மில்லினியம் க்ரைம், மேஜிக், நகைச்சுவை, பழிவாங்கல் ஆகிய அனைத்து கூறுகளையும் கொண்ட ஒரு பரபரப்பான மிஸ்ட்ரி திரில்லருக்கான திரைக்கதையை உருவாக்கத் தவறி விட்டார்.

மொத்தத்தில் வாமா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜாகிர் அலி, ஸ்ரீ சரவணா பிலிம் ஆர்ட்ஸ் ஜி சரவணா இணைந்து தயாரித்திருக்கும் ஜோரா கைய தட்டுங்க – ஏமாற்றமே மிச்சம்.