தை பொங்கலை அதிரவைத்த தல தளபதியின ஸ்டண்ட் இயக்குனர் ஸ்டண்ட் சில்வா
2024-ல் தை பிறந்ததும் வெளியாகும் திரைப்படங்களில் எந்த படம் நம் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யும் என்று அதிகம் எதிர்பார்ப்போம்.அதில் ஏதாவது சில படங்கள் முன் வரிசையிலும் மற்றும் ஒரு சில படங்கள் அடுத்த வரிசையிலும் இருப்பதை நாம் சிறுவயது முதல் பார்த்திருக்கிறோம்.இந்த தை பொங்கலில் வெளிவந்த படங்களான கேப்டன் மில்லர்,அயலான்,மெரி கிரிஸ்மஸ்,ஹனுமான் மற்றும் மிஷன் சாப்டர்-1ஆகிய படங்களில் அதிகமாக ரசிகர்களின் மனதை கவர்ந்த அதிரடி ஆக்ஷன் படமாக மிஷன் சாப்டர்-1 இடம் பெற்றுள்ளது.
மிஷன் சாப்டர் 1 ஆக்க்ஷன் காட்சிகளை பார்க்கும் பொழுது ஹாலிவுட் படம் பார்ப்பது போல் பிரம்மிப்பாக உள்ளது.
இப்படத்தில் ஜெயிலராக நடித்திருக்கும் எமி ஜாக்சனும் அதிரடி ஆக்க்ஷனில் அனல் பறக்க விடுகிறார். இதற்கு காரணம் சண்டை பயிற்சி இயக்குனர் ‘ஸ்டண்ட் சில்வா தான்!
பார்ப்பதற்கு நூடுல்ஸ் தலையுடன் முகத்தில் தழும்புடன் கரடு முரடாக காட்சியளிக்கும் இந்த ஸ்டண்ட் சில்வாவின் மனம் ஒரு பச்சை குழந்தை போன்றது,இது பார்ப்பவர்களுக்கு தெரியாது,ஆனால் அவருடன் பழகியவர்களுக்கு மட்டும்தான் தெரியும் அவர் ஒரு சொக்கத்தங்கம் என்று.
இதற்க்கு சான்றாக இவர் தமிழில் இயக்கிய முதல் திரைப்படம் ‘சித்திரை செவ்வானம்’ சமுத்திரக்கனி மற்றும் பிரபல நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியாகி பார்த்த அனைவரது நெஞ்சையும் நெகிழ வைத்து மிகபெரிய எமோஷனல் வெற்றி படமாக அமைந்தது.
இத்திரைபடத்தின் மூலமாக சமூகத்தில் பெண் பிள்ளைகளை எவ்வாறு பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்றும் சோஷியல் மீடியாவை எப்படி கையாளவேண்டும் என்றும் ஒரு உன்னதமான கருத்தை சொல்லி, இந்த படத்தை ஒரு சாதாரண படமாக இல்லாமல் மிகபெரிய பாடமாக செதுக்கியிருந்தார்.
இந்த 2024 ஆம் ஆண்டு மிக பிரமாண்டமான சூப்பரான அதிரடி ஆக்க்ஷன் திரைப்படத்தை இயக்க போகிறார் ஸ்டண்ட் சில்வா.
செய்யும் தொழிலே தெய்வம் என்றும் நாம் செய்யும் தொழிலுக்கு என்றைக்குமே உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பதே இவருடைய கொள்கை.
இதுவே இவரின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக உள்ளது.
எந்த வேலையாக இருந்தாலும் அந்த வேலையை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கி அடிப்பதில் வல்லவரான ஸ்டண்ட் சில்வா இந்த பொங்கலில் மிஷன் சாப்டர் -1 படத்தின் வெற்றியை தொடர்ந்து அவரின் திரையுலக வாழ்வில் இனி எல்லாம் ஏறு முகமே.
வாழ்த்துக்கள்.💐