பேட்மின்டன் வீரரை மணக்கவுள்ள நடிகை டாப்ஸி
கடந்த பத்தாண்டுகளாக அவர் டென்மார்க்கைச் சேர்ந்த பேட்மின்டன் பிளேயர் மத்தியாஸ் பாயை (Mathias Boe) காதலித்து வந்தார். இந்நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் அடுத்த மாதம் இவர்களது திருமணம் நடக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உதய்பூரில் டாப்ஸி – மாத்தியாஸ் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மாடலிங் செய்து வந்த டாப்ஸி பன்னு 2010 இல் தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். 2011 ல் வெற்றிமாறனின் ஆடுகளம் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர், 2013 ல் வருண் தவான் படத்தில் இந்தியில் அறிமுகமானார்.
வழக்கமான ஹீரோயினாக வலம்வந்த டாப்ஸி, பேபி, பிங்க், தி காஸி அட்டாக், பத்லா, மிஷன் மங்கள், தப்பாட், ஹசீனா தில்ரூபா, ராஷ்மி ராக்கெட் படங்களின் மூலம் தானொரு தனித்துவமான நடிகை என்பதை நிரூபித்தார். இந்தியில் நாயகி மையப் படங்களில் நடிக்குமளவுக்கு செல்வாக்குப் பெற்றார். சமீபத்தில் வெளியான ஷாருக்கின் டங்கி படத்திலும் பிரதான வேடத்தில் நடித்திருந்தார்.
உதய்பூரில் டாப்ஸி – மாத்தியாஸ் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். திருமணத்துக்குப் பிறகும் நடிப்பைத் தொடர்வது என டாப்ஸி முடிவெடுத்துள்ளார். விரைவில் திருமண தேதியை அறிவிக்க உள்ளனர். தமிழ், இந்தி, தெலுங்கு படவுலகைச் சேர்ந்த திரைபிரபலங்கள் இந்தத் திருமணத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.