சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஆசான்’ : பாராட்டில் இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு
கோவாவில் நடைபெற்று வரும் 55-ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் உலகம் முழுவதிலிருந்தும் திரைப்படங்கள், குறும்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்படுகிறது. இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களின் படக்குழுவை அழைத்து மரியாதை செய்து உயரிய அங்கீகாரத்தை தருகிறது.
அந்த வகையில் தமிழகத்திலிருந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய முழு நீள திரைப்படமான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, இ.வி. கணேஷ்பாபு இயக்கிய ‘ஆசான்’ குறும்படம் மற்றும் இரண்டு குறும்படங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்டது.
மேலும் வெளிநாட்டினரும், இந்திய திரைப்படக் கல்லூரி மாணவர்களுமாக அரங்கம் நிறைந்த காட்சியாக ‘ஆசான்’ திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீகாந்த் தேவா இசையில், என்.கே.ராஜராஜன் ஒளிப்பதிவில், சுராஜ்கவி படத்தொகுப்பில் ஆசான் உருவாகியுள்ளது. இந்திய அரசு நேரடியாக நடத்தும் ஒரே சர்வதேச திரைப்பட விழா இது என்பது குறிப்பிடத்தக்கது.