காதலிலும் மாற்றங்கள் செய்யும் அரசியல்!
சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக, எஸ்.வினோத் குமார் வழங்கும், ‘சேத்துமான்’ படப்புகழ் தமிழ் இயக்கும் ‘கனா’ புகழ் தர்ஷன்- ‘ஹிருதயம்’ தர்ஷனா ராஜேந்திரன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இரவு- பகல் என ஒரேக்கட்டத்தில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. படப்பிடிப்பு மைசூர், பெங்களூர், மாதேஸ்வரன் மலைப்பகுதிகள், தர்மபுரி, மேட்டூர் ஆகிய சுற்றுவட்டாரப்பகுதிகளில் நடைபெற்றது. படத்திற்கு தீபக் ஒளிப்பதிவு செய்திருக்க, பிந்துமாலினி- வேதாந்த் பரத்வாஜ் இசையமைத்துள்ளனர். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் வெளியீட்டுத் தேதி ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும்.
தொழில்நுட்பக் குழு விவரம்:
திரைக்கதை & இயக்கம் : தமிழ்,
கதை & வசனம் : பெருமாள் முருகன்
தயாரிப்பு : செ. வினோத்குமார்,
ஒளிப்பதிவு : தீபக்,
இசை: பிந்துமாலினி- வேதாந்த் பரத்வாஜ்,
படத்தொகுப்பு : கண்ணன்,
கலை வடிவமைப்பு : பி. ஜெயமுருகன்
ஒலிப்பதிவு : அந்தோனி பி. ஜெ. ரூபன்,
சண்டைப்பயிற்சி : பில்லா ஜெகன்,
உடை வடிவமைப்பு : ஈகா பிரவீன்,
எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர்: திவாகர். ஜெ,
விளம்பர வடிவமைப்பு : சிவா
மக்கள் தொடர்பாளர் : சுரேஷ் சந்திரா,
நிறுவனத்தின் பெயர் : சினிமாக்காரன்