Site icon Chennai City News

ஃபிளை டார்ட் ஸ்டுடியோஸ்  அஞ்சி நடுங்கிட பட பூஜை!

ஃபிளை டார்ட் ஸ்டுடியோஸ்  அஞ்சி நடுங்கிட பட பூஜை!

ஃபிளை டார்ட் ஸ்டுடியோஸ் (FLY DART STUDIOS) தயாரிப்பில் “அஞ்சி நடுங்கிட” எனும் புதிய திரைப்படம் தயாரிக்கப்படவுள்ளது . 07-02-23 அன்று  சென்னை பிரசாத் லேபில் இனிதே பூஜையுடன் தொடங்கப்பட்டது.

கதை சுருக்கம்: தாய் , தந்தை மேல் பாசமும், தன்னை சுற்றி இருப்பவர்களின் மேல் அன்பும் வைத்திருந்த இளைஞன் ஒருவன் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தாய் தந்தையரை நயவஞ்சகமாக கொன்றவர்களை பழி வாங்கும் கதை . இது ஒரு வித்தியாசமான ஆக்க்ஷன் திரில்லர் படம் .

இப்படத்தில் புதுமுக கதாநாயகனாக மாறன் அறிமுகமாகிறார் .கதாநாயகியாக பழம்பெரும் நடிகர் ஜெஸ்டின் அவர்களின் பேத்தி ‘ஹரிஷா ஜெஸ்டின்’ இப்படத்தில் நடிக்கிறார் .மேலும் ஜெய் பாபு ,லோகேஷ், அதிரடி அரசு மற்றும் பபிதா ஜெஸ்டின் என முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்க உள்ளனர் .

இப்படத்தின் படப்பிடிப்பு கிருஷ்ணகிரி, ஓசூர், மைசூர் ,பெங்களூர் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடக்க உள்ளது.

தொழில்நுட்பக் கலைஞர்கள்:
கதை,திரைக்கதை,வசனம்- மாறன்
இயக்கம்- M. ஸ்ரீதர்
ஒளிப்பதிவு – A .T ஜாய்
இசை – டாக்டர் செல்லையா பாண்டியன்
பாடல்கள் – தொல்காப்பியன் ,மாறன்
எடிட்டிங் – லெனின் சந்திரசேகர்
நடனம் – பவர் சிவா
ஸ்டண்ட் – காட்டு ராஜா
கலை – ராமலிங்கம்
மக்கள் தொடர்பு – செல்வரகு

Exit mobile version