Chennai City News

‘லால் சலாம்’ படத்தின் முதல் சிங்கிள் ”தேர் திருவிழா” பாடலை வெளியிட்ட படக்குழு!

‘லால் சலாம்’ படத்தின் முதல் சிங்கிள் ”தேர் திருவிழா” பாடலை வெளியிட்ட படக்குழு!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மேலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கடந்த 12-ம் தேதி நடிகர் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ‘லால் சலாம்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது. படத்தின் முதல் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

அதன்படி லால் சலாம் படத்தின் “தேர் திருவிழா” என்ற தலைப்பு கொண்ட முதல் பாடலை லைகா நிறுவனம் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டு உள்ளது. தேர் திருவிழா பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது.

Exit mobile version