Chennai City News

லாக்டவுன் டைரி படத்தின் மூலம் புதிய இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார் AB.முரளிதரன்

லாக்டவுன் டைரி படத்தின் மூலம் புதிய இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார் AB.முரளிதரன்

லாக்டவுன் டைரி படத்தின் மூலம் தமிழில் புதிய இசை அமைப்பாளராக AB.முரளிதரன் அறிமுகமாகிறார் இவர் கன்னடத்தில் 6 படங்களுக்கு இசை அமைப்பாளராக பணியாற்றியிருக்கிறார். ஆஸ்கார் விருதுப் பெற்ற இசையமைப்பாளர் கீரவாணியிடம் 10 வருடங்கள் உதவியாளராக கீ போர்டு பிளேயராக பணியாற்றியிருக்கிறார்.

இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஆஸ்கார் விருதுப்பெற்ற A.R.ரஹ்மான், வித்யாசாகர் ஆகியோரிடமும், மற்றும் கன்னட பட உலகின் முன்னணி இசையமைப்பாளர்களிடமும் கீ போர்டு பிளேயராக பணியாற்றியிருக்கிறார். தமிழில் ஸ்டண்ட்மாஸ்டர் ஜாலி பாஸ்டன் இயக்கி தயாரித்திருக்கும் லாக்டவுன் டைரி தமிழ்ப்படத்திற்கு இசையமைத்து புதிய இசையமைப்பாளராக தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமாகிறார் AB. முரளிதரன்

மற்ற மொழிகளில் இசையமைக்கிற வாய்ப்புகள் வந்தாலும் தமிழ்ப்படங்களுக்கு அதிகமாக இசையமைக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறேன் என்கிறார் லாக்டவுன் டைரி படத்தின் இசையமைப்பாளர் AB.முரளிதரன்.

Exit mobile version