Chennai City News

ராக்கி விமர்சனம்: ரத்த ரணகளத்தோடு வீறு நடை போடும் ராக்கி

ராக்கி விமர்சனம்: ரத்த ரணகளத்தோடு வீறு நடை போடும் ராக்கி

ரா ஸ்டூடியோஸ் சி.ஆர்.மனோஜ்குமார் தயாரிப்பில் ராக்கி படத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனாரவி, ரோகிணி, அனிஷா, ரவி வெங்கட்ராமன், அஷ்ரப்மல்லிசேரி, பூராமு, ரிஷிகாந்த், ஜெயக்குமார், கானா தரணி, ஜிமிக்கிலி ஆகியோர் நடித்து படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அருண் மாதேஸ்வரன்.ஷ்ரேயாஸ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய , ராகூரன் படத்தொகுப்பு, ராமு தங்கராஜ் கலை, தர்புகா சிவா இசையில் ராக்கி வெளிவந்துள்ளது. மக்கள் தொடர்பு-நிகில் முருகன்.

தாதா மணிமாறனிடம் அடியாளாக வேலை செய்யும் ராக்கியின் தந்தை இறப்புக்குப்பிறகு அவரிடமே அடியாளாக ராக்கி வேலை செய்கிறார். மணிமாறனின் மகனுக்கும், ராக்கிக்கும் சில விஷயங்களில் முட்டி மோதிக்கொள்கின்றனர். மணிமாறனின் மகன் ராக்கியின் அம்மா மல்;லியை கொலை செய்ய, அதற்கு பழி வாங்க துடிக்கும் ராக்கியும் மணிமாறனின் மகனை கொன்று விட்டு சிறைக்கு செல்கிறார். தண்டனை முடிந்து வெளியே வரும் ராக்கியை மகனை கொன்றதால் பழி வாங்க காத்துக் கொண்டிருக்கிறார் மணிமாறன். ராக்கியை பின் தொடர்ந்து அவருடைய தங்கையை கொலை செய்யும் மணிமாறனை பழி தீர்க்க மீண்டும் புறப்படுகிறார் ராக்கிஃ இதில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனாரவி, ரோகிணி, அனிஷா, ரவி வெங்கட்ராமன், அஷ்ரப்மல்லிசேரி, பூராமு, ரிஷிகாந்த், ஜெயக்குமார், கானா தரணி, ஜிமிக்கிலி மற்றும் பலர் படத்தின் உயிர்நாடிகள்.

ஒளிப்பதிவு-ஷ்ரேயாஸ் கிருஷ்ணன், படத்தொகுப்பு-ராகூரன், கலை-ராமு தங்கராஜ், இசை-தர்புகா சிவா ஆகிய அனைவருமே படத்தின் வெற்றிக்கு பெரும் பங்கு வகித்துள்ளனர்.

இலங்கை அகதிகளாக வந்து தாதாவாக வடசென்னையில் காலூன்றும் கடத்தல் கும்பலுக்குள் நடக்கும் பழிக்கு பழி வாங்குதல் கதையே ராக்கி. இதை முதல் பாதி மெதுவாக நகர்த்தி, இரண்டாம் பாதியில் காட்சிகளை விவரிக்கும் போது தான் கதை புரிய ஆரம்பிக்க,இறுதிக்காட்சியில் எதிர்பாராத திருப்பத்துடன் கதையை முடித்துள்ளார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன். சிம்பிளான கதைக்களத்தை சொன்ன விதம் வித்தியாசமான கோணத்தில் நான் லீனியர் கதையாக ரத்தம் தெறிக்க விட்டு கொடூரமான கொலைகளை அப்பட்டமாக காட்டி மிரட்டலாக கொடுத்துள்ளார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.

மொத்தத்தில் ரா ஸ்டூடியோஸ் சி.ஆர்.மனோஜ்குமார் தயாரிப்பில் ரத்த ரணகளத்தோடு வீறு நடை போடுகிறது.

Exit mobile version