Chennai City News

மீண்டும் வெற்றி வாகை சூடிய நாசர் – விஷால் – கார்த்தியின் பாண்டவர் அணி

மீண்டும் வெற்றி வாகை சூடிய நாசர் – விஷால் – கார்த்தியின் பாண்டவர் அணி

2019ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நுங்கம்பாக்கத்தில் உள்ள குட் ஷெப்பர்ட் பள்ளியில் இன்று காலை முதல் நடைபெற்றது. அதன்முடிவில் விஷால் மற்றும் கார்த்தியின் பாண்டவர் அணி மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது.

நுங்கம்பாக்கம், சென்னை என்.எஸ்.கிருஷ்ணன், தங்கவேலு உள்ளிட்ட பழம்பெரும் நடிகர்களால் கடந்த 1952 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது தென்னிந்திய நடிகர் சங்கம். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றியடைந்த நடிகர் விஷால் அணியினரின் பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி மீண்டும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகள் தேர்தல் நடத்திய அதிகாரியும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான பத்மநாபன் தலைமையில் விறுவிறுப்பாக நேற்றே நடைபெற்றன.

ஏற்பாட்டின்படி, தலைவர், துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டு, அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மொத்தமுள்ள 29 பதவிகளுக்கான தேர்தலில், விஷால் மற்றும் ஐசரி கணேஷ் தலைமையில் இரண்டு அணிகள் போட்டியிட்டன. அதன்படி தேர்தலில் பதிவான வாக்குச்சீட்டுகள் நீதிமன்ற உத்தரவுப்படி தனியார் வங்கியில் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் சமீபத்தில் உயர்நீதிமன்றம் அந்த வாக்குகளை எண்ணும்படி உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில், பாக்யராஜ் 1054 வாக்குகள் வாங்கிய நிலையில் நாசர் 1701 வாக்குகள் பெற்று மீண்டும் தலைவர் ஆகிறார்.  நடிகர்கள் விஷால் – கார்த்தி இருந்த அணி வெற்றி பெற்றிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தேர்தலில் பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட விஷால் இரண்டாவதொரு முறையாக இந்த வெற்றியை பெற்றிருக்கிறார். போலவே பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட கார்த்தியும் மீண்டும் வெற்றி பெற்றார். இதன்மூலம் பாண்டவர் அணி பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளை மீண்டும் கைப்பற்றியுள்ளனர் இருவரும்.

வெற்றி பெற்ற நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள்:

1. குஷ்பூ 1407
2. கோவை சரளா 1399
3. ராஜேஷ் 1384
4. மனோபாலா 1372
5. அஜய் ரத்தினம் 1365
6. பசுபதி 1335
7. ஜூனியர் பாலயா 1312
8. சிபிராஜ் 1296
9. லதா 1288
10. விக்னேஷ் 1279
11. சோனியா 1277
12. பிரசனா 1275
13. நந்தா 1272
14. ரமணா 1258
15. தளபதி தினேஷ் 1258
16. சரவணன் 1247
17. பிரேம்குமார் 1242
18. ஸ்ரீமான் 1241
19. ஜெரோல்ட் 1184
20. ரத்தனப்பா 1137
21. மா பிரகாஷ் 1106
22. வாசுதேவன் 1105
23. ஹேமச்சந்திரா 1077
24. காளிமுத்து 1075

தரணி போற்றும் தங்கத் தலைவர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் துணைத் தலைவராக வெற்றி பெற்ற பூச்சி எஸ்.முருகன் அவர்கள் இன்று(21.3.22) நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

வெற்றிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி, “ 2015 முதல் 2019 வரை நடிகர் சங்க வரலாற்றில் முக்கியமான நாட்கள். எங்கள் டீம் சொந்த வாழ்க்கையை, நேரத்தை தியாகம் செய்து உழைத்தார்கள். இப்போது கிடைத்துள்ள வெற்றி 2 வருட சட்ட போராட்டத்திற்கு பிறகு கிடைத்துள்ளது. நடிகர் சங்கக் கட்டிடம் முடிவுற்று அதிலிருந்து வரும் வரும் வருமானம் தான் எதிர்கால சந்ததிக்கு உதவப்போகிறது.” என்று தெரிவித்தார்.

பதவிக்கால குறித்த கேள்விக்கு பதிலளித்த கார்த்தி, “பதவியேற்ற நாளில் இருந்து 3 ஆண்டுகள் பதவிக்காலம் இருக்கும். நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்க இன்னும் 3 ஆண்டுகள் கிடைத்துள்ளது. கட்டிடத்தை விரைவாக முடிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

தங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த கார்த்தி, அனைவருடனும் இணைந்து இணக்கமாக செயல்படுவோம் என உறுதியளித்தார்.

முதலமைச்சர் ஸ்டாலினை சந்திப்பீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த கார்த்தி, “கண்டிப்பாக. ஒவ்வொரு தேர்தல் வெற்றிக்கு பின்னும் முதலமைச்சரை சந்திப்பது மரபு” என்று தெரிவித்தார். நிதிச் சிக்கல் நிறைய இருப்பதாகவும் அவற்றை ஒவ்வொன்றாக சரி செய்வோம் என்று நடிகர் கார்த்தி தெரிவித்தார்.

Exit mobile version