Site icon Chennai City News

மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி

மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், முருகானந்தம் அவர்கள் வழங்கும் ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பிசாசு-2’. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ‘பிசாசு-2’ படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இயக்குனர் மிஷ்கினின் கலை ஆர்வம் குறித்தும், விஜய் சேதுபதி எவ்வாறு இப்படத்தில் இணைந்தார் என்பது குறித்த ருசிகர தகவல்களை பகிர்ந்துள்ளார். மிஷ்கின் அவர்களுடைய பல நேர்காணல்களில் அவர் சொல்லி இருப்பார், குரோசோவோவுடன் பத்து வருடம் டிராவல் பண்ணினேன் என்று இவர் குரோசோவோ படம் தானே பார்த்திருப்பார். எப்படி டிராவல் பண்ண முடியும் என்று எண்ணும்போது திருவள்ளுவர் இப்போது இல்லை. ஆனால் குறள் வழியாக நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதைப் போன்ற உறவுதான் குரோசோவோ-மிஷ்கின். அதை நான் அவரை சந்தித்த பிறகு சைக்கோ படம் பார்த்த பிறகு அவர் குரோசோவாவுடன் எவ்வாறு பயணப்பட்டு இருப்பார் என்பதை நான் உணர்ந்தேன். உண்மையிலே ‘சைக்கோ படம் பார்த்து பிரம்மித்து போனேன் . படம் மிகவும் பிடித்திருந்தது. ஒவ்வொரு ஷாட்டும் கதை சொன்னது. ஒரு நாள் இயக்குநர் மிஷ்கினை தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்தேன். அப்போது சந்திக்கலாமா என்றதும் ‘வா கண்ணம்மா’ என்று அழைத்தார்.

மீட்டிங் சிறப்பாக முடிந்தது.

‘பிசாசு-2′ கதையை சுருக்கமாக சொன்னார். ஒவ்வொரு கேரக்டரையும் எப்படி உருவாக்கி வைத்திருக்கிறார் என்பதை சொல்லும்போது சினிமா கலைஞனாக பெருமிதம் அடைந்தேன். நாம் இருவரும் சேர்ந்து படம் பண்ணுவோம். அதுவும் சீக்கரமாக பண்ணுவோம் என்றேன், எனவே பிசாசு 2 படத்தில் எனக்காக ஒரு பிரத்யேகமாக சிறிய கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளார். உங்கள் சிந்தனையில் நான் படம் பண்ணனும். நான் ரெடியாக இருக்கிறேன்.உங்களுடன் படம் பண்ணம்போது சினிமாவை மேலும் கற்றுக்கொள்ள முடியும்’ என்று தெரிவித்து உள்ளார்.

Exit mobile version