மிகப்பெரிய தொகைக்கு விற்பனையான விஷாலின் ரத்னம் படத்தின் OTT உரிமை..! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்!!
மிகப்பெரிய தொகைக்கு விற்பனையாகியுள்ளது விஷாலின் ரத்னம் படத்தின் OTT உரிமை.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் தற்போது ரத்னம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குனர் ஹரி இப்படத்தை இயக்கி வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
அதாவது அமேசான் பிரைம் நிறுவனம் இந்த படத்தின் உரிமையை விஷால் திரை பயணத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. தற்போது படத்தின் படப்பிடிப்புகள் திருப்பதியில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.