மலையாளத்தில் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ஆதேஷ் பாலா
தமிழில் ரஜினி, அஜித், பிரஷாந்த், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் ஆதேஷ் பாலா.
அண்மையில் வெளியான ‘அந்தகன்’ படத்தில் பிரசாந்த் & ஊர்வசி ஆகியோருடன் நடித்திருந்தார்.
இந்த நிலையில் முதல்முறையாக ஆதேஷ் பாலா கதையின் நாயகனாக மலையாளத்தில் அறிமுகமாகிறார்…
கதையின் நாயகியாக ஆலியா என்ற மலையாள நடிகை நடிக்கிறார்.
இப்படத்தில் சம்பத்ராம், விசித்ரன் போன்ற தமிழ் நடிகர்களும் நடிக்கிறார்கள்..
காவன்ராய் மற்றும் பிரபல மலையாள நடிகர்களும் நடிக்கிறார்கள்…
ஆலியா ட்ரீம் சினிமாஸ் சார்பில் திருமதி வினிதா ரமேஷ் அவர்கள் தயாரிக்கிறார்.
இப்படத்தின் பூஜை கேரளாவிலுள்ள எடப்பள்ளி என்ற இடத்தில் சிறப்பாக நடைபெற்றது…