Chennai City News

ப்ளட் ரோஸஸ் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

தெலுங்கு மற்றும் தமிழில் ஆக்‌ஷன் க்ரைம் த்ரில்லர் படமான ப்ளட் ரோஸஸ் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

இயக்குனர் எம்.ஜி.ஆர் எழுதி இயக்கி ஹரிஷ் கே தயாரிப்பில் .பி.ஆர் சினி கிரியேஷன்ஸின் நாகண்ணா மற்றும் கே. லக்ஷ்மம்மா வழங்க, யெல்லப்பா இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘பிளட் ரோஸஸ்’.

இந்தப் படத்தில் ரஞ்சித் ராம் மற்றும் அப்சரா ராணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஸ்ரீலு மற்றும் கிராந்தி கில்லி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், சுமன், கோலடி ஸ்ரீனிவாஸ், டார்ஜான், ராஜேந்திரா, ஜூனியர் ரேலங்கி, ஜெகதீஸ்வரி, மணி குமார், துருவா, அனில், நரேந்திரா, பிரக்யா, நவிதா, ஜபர்தஸ்த் ஜிஎம்ஆர், ஜபர்தஸ்த் ராமு, ஜபர்தஸ்த் பாபு, ஈடிவி ஜீவன், மம்தா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இயக்குநர் எம்.ஜி.ஆர். இந்தப் படத்தை, ஒரு அழுத்தமான திரைக்கதையின் மூலம், பார்வையாளர்களை கவரும் வகையில் படமாக்கியுள்ளார். “பிளட் ரோஸஸ்” திரைப்படம் ஒரு கிரைம் திரில்லர் மற்றும் அதிரடித் திரைப்படமாகும். இந்தப்படத்திற்க்காக ஆந்திரா மற்றும் கர்நாடகா மலைப்பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் பிரசாத் லேபில் நடைபெற்று வருகின்றன.

டிபிஆர் சினி கிரியேஷன்ஸ் கே. நாகண்ணா, தயாரிப்பாளர் – ஹரிஷ் கே,
இணை தயாரிப்பாளர் – யெல்லப்பா, எழுத்து, இயக்கம்: எம்.ஜி.ஆர்.

Exit mobile version