பொன்னியின் செல்வன்-2 வெளியான 4 நாட்களில் ரூ.200 கோடி வசூல்.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் 2 பாகங்களாகத் திரைப்படமாக்கி இருக்கிறார். முதல் பாகம் கடந்த ஆண்டுசெப்டம்பர் மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
லைகா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸும் இணைந்துத் தயாரித்திருந்த இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், லால் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்திவந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய்நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார்பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்த’பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் நேற்று முன் தினம் வெளியானது. தமிழகத்தில் அதிகாலை காட்சிகளுக்கு அரசு அனுமதி இல்லாததால் காலை 9 மணிக்கு முதல் காட்சிகள் தொடங்கின. படம் வெளியாகி தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது படம் வெளியான இரண்டே நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்திருந்தது.
இந்த நிலையில், தற்போது படம் வெளியாகி நான்கு நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை உலகெங்கும் மொத்தம் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.