Chennai City News

பா.இரஞ்சித் ஒருங்கிணைத்த சமூக நீதியைப்பேசும் மேடை நாடகங்கள்

பா.இரஞ்சித் ஒருங்கிணைத்த சமூக நீதியைப்பேசும் மேடை நாடகங்கள்

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வானம் கலைத்திருவிழா , தலித் வரலாற்று மாத நிகழ்வாக ஏப்ரல் மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திவருகிறார்.

பி.கே ரோசி திரைப்படவிழா, புகைப்படக்கண்காட்சி, கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசை நிகழ்ச்சியைத்தொடர்ந்து மேடை நாடகங்களும் நடைபெற்றன.

சென்னை ஐ, சி எப் அம்பேத்கர் அரங்கத்தில் சமுக நீதியைப்பேசும் நாடகங்கள் நடைபெற்றன.

சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக இந்த நாடகங்கள் இருந்தன. நாட்டின் அரசியல் போக்குகள், அதிகாரத்தின் கோரமுகங்கள், ஆட்சியாளர்களின் மெத்தனங்கள் , மக்களின் உளவியல் என கலவையான நாடகங்கள் நடைபெற்றன.

நிகழ்வில் பேசிய ரஞ்சித். சினிமாவிற்கு முன்பு நான் கல்லூரிக்காலங்களில் நாடகங்கள் நடத்தியிருக்கிறேன். சினிமாவைப்போல நாடகங்கள் மீதும் பெரும் விருப்பம் உண்டு.

பிரிவினைவாதம் தலைவிரித்தாடும் இந்த காலகட்டத்தில்
கலைகள் வழியாக நாம் சமத்துவத்தை யும் , மனிதநேயத்தையும் பேசவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சினிமா, மற்றும் பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள் ,நாடகங்கள் இன்னும் என்னென்ன கலைகள் வழியாகவெல்லாம் இந்த சமூகத்தில் அன்பு திழைத்திருக்க மக்கள் மத்தியில் நம்மால் பேச முடியுமோ நாம் பேசுவோம். நீலம் பண்பாட்டு மையம் தொடர்ந்து மக்களிடையே சமூகத்திலிருக்கும் முரண்களை பேசுவதோடு குறைந்தபட்ச அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் . தொடர்ந்து மனித மாண்பை மீட்டெடுக்க இயங்குவோம் .

தொடர்ந்து இனி நாடகத்திருவிழா நடத்தும் திட்டமும் இருக்கிறது என்றார்.

சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் புகைப்படக்கண்காட்சி நடைபெற்றுவருகிறது. மிக முக்கியமான புகைப்படங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெருகின்றன. ஓவியக்கண்காட்சி வருகிற 23ம் தேதி துவங்கவிருக்கிறது.

Exit mobile version