Chennai City News

பல லட்சம் ரூபாய் ஏலத்தில் விலைப்போன ஏ.ஆர்.ரகுமானின் ஆடை

பல லட்சம் ரூபாய் ஏலத்தில் விலைப்போன ஏ.ஆர்.ரகுமானின் ஆடை

சென்னையில் நடந்த விழா ஒன்றில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ஆடை லட்சக்கணக்கில் ஏலம் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைபாளரும் பாடகருமான இசைப்புயல் என அழைக்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் சர்வதேச அளவில் சினிமாத் துறைக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கார் விருதினை இரண்டு முறை வென்ற ஒரே இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் தான் ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்த நிலையில் தான் இன்று ஆழ்வார்பேட்டை மியூசிக் அகாடமியில் ராஜஸ்தான் காஸ்மோ கிளப் அறக்கட்டளையின் 28 ஆம் ஆண்டின் நிறுவன நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் தமிழக அரசின் கைத்தறி அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஆடைகளை வாங்க இயலாதவர்களுக்கு நிதி கொடுத்து உதவும் திட்டம் மூலம்,ஏ.ஆர்.ரஹ்மான் பயன்படுத்திய ஆடை ஒன்றினை 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்கு ஏலம் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதை பிரமோத் சுரடியா என்பவர் ஏலம் மூலம் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

Exit mobile version