Site icon Chennai City News

நிரபராதியாக அறிவிக்கப்பட்ட நிவின் பாலி: அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்

நிரபராதியாக அறிவிக்கப்பட்ட நிவின் பாலி: அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.

நடிகர் நிவின் பாலி மீது ஒரு பெண் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார், இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், நிவின் பாலி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானதென்றும் அவர் நிரபராதியென்றும் தீர்ப்பளித்துள்ளனர்.

நடிகர் நிவின் பாலி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையில், சம்பவம் நடந்த தேதி மற்றும் நேரத்தில் அவர் குறிப்பிட்ட இடத்தில் இல்லை என்பது உறுதியாகத் தெரியவந்தது. இதனையடுத்து, இந்த வழக்கில் ஆறாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிவின் பாலி அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் முறையாக விடுவிக்கப்பட்டுள்ளார். கொத்தமங்கலம் டி.ஒய்.எஸ்.பி முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில் இந்த தீர்மானம் மிக நுணுக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version