
நானும் சிங்கள் தான் விமர்சனம்

த்ரீ இஸ் எ கம்பெனி புரொடக்ஷன்ஸ் ஜெயகுமார், புன்னகை பூ கீதா இணைந்து தயாரித்து வெளியாகியுள்ள படம் நானும் சிங்கிள் தான். தினேஷ், தீப்தி சதி, மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன், ஆதித்யா கதிர், விகாஷ் சம்பத், ரமா நடித்துள்ளனர். ஒளிப்பதிவு கே.ஆனந்தராஜ். இசை ஹித்தேஷ் மஞ்சுநாத், பாடல்கள் கபிலன் வைரமுத்து. இயக்கம் கோபி.
நாயகன் தினேஷ் வழக்கமான அவரது அதே ஸ்டைலில் நடித்திருக்கிறார். வசனங்கள் உச்சரிப்பில் இன்னும் கொஞ்சம் தெளிவு வேண்டும்.
நாயகி தீப்தி சதி வலிமையான ஹீரோயின் கதாபாத்திரம். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கன கச்சிதமாக செய்துள்ளார். நடனம் அருமை.
ஒளிப்பதிவாளர் ஆனந்தராஜ் கதைக்கான காட்சிகள் வித்தியாசமாகவும், இளமையாகவும் படமாக்கியுள்ளார்.
ஆண்டனியின் படத்தொகுப்பும், ஹித்தேஷ் மஞ்சுநாத் இசையும், பின்னனி இசையும் ஓகே ரகம் தான்.
ஆண்கள் மேல் நம்பிக்கையே இல்லாமல் தன்னால் சிங்கிளாவே வாழ்க்கை முழுவதும் வாழமுடியும் என நினைக்கும் பெண்ணுக்கும், கனவிலும் காதல் கைகூடாமல் சிங்கிளாவே இருக்கும் இளைஞனுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் நானும் சிங்கிள்தான். வலிமையான ஹீரோயின் கதாப்பாத்திரம் அமைத்த இயக்குனர் கோபி திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார்.
மொத்தத்தில் நானும் சிங்கிள் தான் – ரோமான்டிக் காதல் கிங்கு தான்.