Site icon Chennai City News

நயன்தாரா நடித்த கனெக்ட் ரிலீசில் திடீர் சிக்கல்? படம் வெளிவருமா…?

நயன்தாரா நடித்த கனெக்ட் ரிலீசில் திடீர் சிக்கல்? படம் வெளிவருமா…?

அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ‘கனெக்ட்’ படம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். இதில் சத்யராஜ், வினய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பேய் படமாக தயாராகி உள்ளது. கொரோனா ஊரடங்கில் நயன்தாரா தனது மகளுடன் வீட்டில் இருக்கும்போது அமானுஷ்யங்களில் சிக்கி கொள்வதும் அதில் இருந்து எப்படி தப்புகிறார்கள் என்பதும் கதை.

இந்த படம் மொத்தம் 98 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது என்றும் படத்துக்கு இடைவேளை இல்லை என்றும் படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

வழக்கமாக இடைவேளையில் பார்வையாளர்கள் வெளியே வந்து தியேட்டர் கேண்டீனில் உணவு பண்டங்கள் வாங்கி சாப்பிடுவது வழக்கம். எனவே கனெக்ட் படத்தை இடைவேளை இல்லாமல் திரையிட தியேட்டர் அதிபர்கள் மறுத்து விட்டனர்.

இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஸ்ரீதர் கூறும்போது, ”நயன்தாராவின் கனெக்ட் படத்துக்கு இடைவேளை கிடையாது என்று அவர்களாகவே அறிவித்து உள்ளனர். தியேட்டர் அதிபர்களுக்கு இதுவரை அதுபற்றி தெரிவிக்கவில்லை. இடைவேளை இல்லாமல் எங்களால் படத்தை திரையிடமுடியாது” என்றார்.

நயன்தாரா நடித்த கனெக்ட் ரிலீசில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் படம் நாளை வெளிவருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது?

Exit mobile version