Site icon Chennai City News

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நடிகர் விஷால் சவால்!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நடிகர் விஷால் சவால்!

தென் இந்திய தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக நடிகர் விஷால் இருந்தபோது சங்கத்தின் பணத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த விவகாரத்தில் நடிகர் விஷாலுக்கு எதிராக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, நடிகர் விஷாலை வைத்து புதிய படம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.இனி விஷாலை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என சங்கம் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், தொடர்ந்து படங்களில் நடிப்டேன், முடிந்தால் தடுத்து பாருங்கள் என நடிகர் விஷால் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

இது உங்கள் குழுவில் உள்ள கதிரேசனை உள்ளடக்கிய கூட்டு முடிவு என்பதும், அந்த நிதியானது தயாரிப்பாளர் சங்கத்தின் நலிந்த, மூத்த உறுப்பினர்களின் மருத்துவ காப்பீடு, நலப்பணிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கான கல்வி உள்ளிட்ட நலன்களுக்காக பயன்படுத்தப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியாதா?

உங்கள் வேலையை சரியாக செய்யுங்கள். அதில் முறையான கவனத்தை செலுத்துங்கள். இரட்டை வரி விதிப்பு, தியேட்டர் பராமரிப்பு கட்டணம் என பல விஷயங்கள் தீர்க்கப்பட வேண்டும். தொடர்ந்து படங்களில் நடிப்பேன் . இதற்கு முன் திரைப்படங்களை தயாரிக்காத, எதிர்காலத்திலும் தயாரிக்காமல் வெறும் ‘தயாரிப்பாளர்கள்’ என சொல்லிக் கொள்பவர்களே… முடிந்தால் என்னை தடுத்து நிறுத்துங்கள். ஆரோக்கியமான விஷயங்களைப் பற்றி யோசியுங்கள்” என தெரிவித்துள்ளார்.

https://x.com/VishalKOfficial/status/1816832712193573070

ALSO READ:

நடிகர் விஷாலுக்கு எதிராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை!

நடிகர் விஷாலுக்கு எதிராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை!

Exit mobile version