சிலம்பரசன் TR பிறந்த நாளில் அறிவிக்கப்பட்ட #STR49, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிப்பில், பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார்!
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் சிலம்பரசன் TR பிறந்த நாளில், அவரது ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், அவரது அடுத்த படமான #STR49 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிப்பில், பார்க்கிங் படப்புகழ் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.