Chennai City News

சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்ற அமுதவாணனின் கோட்டா

சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்ற அமுதவாணனின் கோட்டா

இயக்குனர் அமுதவாணனின் இயக்கத்தில் 2020ஆம் ஆண்டு தீபாவளி முடிந்த ஒரு வாரத்தில் வெளியான கோட்டா திரைப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை குவித்தது.

அப்படம் வெளியான போது திரையரங்குகளில் மிகுந்த வரவேற்பையும் ரசிகர்களையும் பெற்றுக் கொடுத்தது. மேலும் சிறந்த விமர்சனங்களையும் பெற்றிருந்தது. இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் ட்ரெய்லரை சினிமா மற்றும் விளையாட்டுத் துறையில் உள்ள பல பிரபலங்கள் வெளியிட்டிருந்தார்கள்.
அத்துடன் கோட்டா திரைப்படத்தின் பயணம் நின்று விடவில்லை. இன்றைய தேதி வரை சுமார் 64 சர்வதேச விருதுகளை குவித்துள்ளது. இதன் பிறகும் இன்னும் பல விருதுகளை குவிக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அதில் முக்கிய விருதாக டொரன்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாக விருதை வென்றுள்ளது.
இந்நிலையில், மேலும் 16 விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Exit mobile version