Site icon Chennai City News

சத்யராஜ் – காளி வெங்கட் இணைந்து நடிக்கும் ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் டைட்டில் & டைட்டில் லுக் வெளியீடு!

சத்யராஜ் – காளி வெங்கட் இணைந்து நடிக்கும் ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் டைட்டில் & டைட்டில் லுக் வெளியீடு!

மே மாதம் வெளியாகும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கும் ‘மெட்ராஸ் மேட்னி’

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான சத்யராஜ் – காளி வெங்கட் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ மெட்ராஸ் மேட்னி ‘ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள’ மெட்ராஸ் மேட்னி’ எனும் திரைப்படத்தில் காளி வெங்கட் ,ரோஷினி ஹரிப்பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தோக், சுனில் சுகதா, சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நடிகர் சத்யராஜ் அறிவியல் சார்ந்த புனைவு கதை எழுதும் மூத்த எழுத்தாளராக திரையில் தோன்றுகிறார். ஆனந்த் ஜி. கே. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. சி. பாலஸ்ரங்கன் இசையமைத்திருக்கிறார். ஜாக்கி கலை இயக்கத்தை கவனிக்க, சதீஷ் சமூஸ்கி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். கிரியேட்டிவ் புரொடியூசராக அபிஷேக் ராஜாவும், எஸ்கியூடிவ் புரொடியூசராக மொமெண்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தை சேர்ந்த ஜி.ஏ.  ஹரி கிருஷ்ணனும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும்  இந்தத் திரைப்படத்தை மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படத்தினை ‘அருவி’, ‘ஜோக்கர்’, ‘கைதி’ போன்ற திரைப்படங்களை வழங்கிய ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது. மேலும் இந்தத் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும், பொழுதுபோக்கு அம்சம் உள்ள நகைச்சுவையான குடும்பப் படமாக இது இருக்கும் என்றும் படக் குழுவினர்  மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version