கொஞ்ச நாள் பொறு தலைவா ! – ALVI Digitech மற்றும் Giant Films இணைந்து வழங்கும் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் இசைக்கச்சேரி முதல்முறையாக கோயம்புத்தூரில்
கோயம்புத்துரில் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி, மக்களின் மனம் கவர்ந்த நமது தேனிசை தென்றல் தேவாவின் இசைக்கச்சேரி நடைபெறவுள்ளது. ALVI Digitech மற்றும் Giant Films நிறுவனங்கள் இணைந்து, மிகப்பிரம்மாண்டாமான முறையில், கோயம்புத்தூரின் கொடிசியா மைதானத்தில், இந்நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.
தமிழ் சினிமா வரலாற்றில் பல ப்ளாக்பஸ்டர் இசை ஆல்பங்களை வழங்கி, கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்தவர்
“தேனிசை தென்றல் “ தேவா.
பல கோடி ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், இன்னிசைக் கச்சேரி நிகழ்ச்சியை தமிழகமெங்கும் துவங்கியிருக்கிறார் தேனிசைத் தென்றல் தேவா. சென்னை, பாண்டிச்சேரியில் வெற்றிகரகமாக இசை நிகழ்ச்சியை முடித்த நிலையில், அடுத்ததாக கோயம்புத்தூரில் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி இசை நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.
ALVI Digitech மற்றும் Giant Films நிறுவனங்கள் இணைந்து இந்த இசை நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்தவுள்ளன.
கோயம்புத்துரில் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட் மற்றும் நிகழ்ச்சி குறித்தான விவரங்கள், பிப்ரவரி மாத இறுதியில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும்.